கனடாவில் நகரின் தலைமை காவலராக தமிழர் நியமனம்!

கனடா நாட்டின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள முக்கிய நகருக்கு தலைமை காவலராக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டின் ஹால்டன் பகுதியில் துணை காவலராக பணிபுரிந்தவர் நிஷ் துரையப்பா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் நகரத்தின் தலைமை காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இது குறித்து நிஷ் கூறுகையில், ‘3000 காவலர்களை கொண்டுள்ள பீல் நகருக்கு தலைமை காவலராக தேர்வு செய்யப்பட்டது மிகவும் பெருமையான ஒன்று. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன்’ என கூறியுள்ளார்.

இவரை பீல் நகருக்கு உட்பட்ட மிஸ்சிசவுகா மேயர் போனி குரோமி வரவேற்றார். நிஷ்,  யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் ஆல்பிரெட் துரையப்பாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.