ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இது பற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி கூறுகையில், “இயற்கையாகவே நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது. ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கிழக்கில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை நேற்று முன்தினம் (24) கனடாவில் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே என்னைப் பொறுத்தவரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னைப் பார்க்கின்றேன். “இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை ...
Read More »மாவீரர் தின தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு எதிராக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் (26), குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதியன்று, கிளிநொச்சி நீதிமன்றத்தில், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால், 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் ...
Read More »தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மொழியாய்! விழியாய்! வழியாய்! எங்கள் உயிராய்! உணர்வாய்! அறிவாய்! ஆற்றலாய்! மானமாய்! வீரமாய்! எங்கள் முகமாய்! முகவரியாய்! பெருமைமிகு அடையாளமாய்! பெரும்வீர வரலாறாய் இருப்பவன் இவன்! சுதந்திரக் காற்று! சுடரொளிக் கீற்று! புரட்சியின் பெரும் வெடிப்பு! தமிழ்த்தேசிய இனத்தின் உயிர் துடிப்பு! ஆண்டுப் பலவாய் அன்னைத் தமிழ் அருந்தவமிருந்து பெற்ற மகன்! புறநானூற்று வீரம் படைத்த மறவன்! மண்ணின் மானம் காக்க வீரர் படை நடத்தியவன் இவன்! அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு உயர்ந்ததென்று உணர்த்தியவன்! இவன் எங்கள் ...
Read More »பொன்னம்பலவாணரின் நினைவஞ்சலிக் கூட்டமும் மலர் வெளியீடும்
காலம் -28-11-2011 நேரம் -காலை 10.30 இடம்- பொன்னாலை வரதராஜா பெருமாள் வித்தியாசாலை மண்டபம்
Read More »ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு- 31 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து உள்நாட்டு போர், வன்முறை காரணமாக வெளியேறும் அகதிகள் ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்கின்றனர். பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கில கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அந்த படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும், 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மைன் தெரிவித்தார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் ...
Read More »மேதகு பிரபாகரனால் சபையில் சர்ச்சை
நேற்று நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார். தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு கட்டத்தில் “மேதகு பிரபாகரன்” என விளித்து கூறிவிட்டார். இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களில் சிலர், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பினர். அப்போது, சபைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்தார். முதலாவதாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் பெண் உறுப்பினரை பார்த்து, “ வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு ...
Read More »தமிழ் இராச்சியத்தின் அரிய கல்வெட்டு
புகைபடர்ந்திருக்கும் இலங்கை தமிழரின் வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டும் வகையில், திருகோணமலையில் மிக அரிய தமிழ்க் கல்வெட்டு, பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு. திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில், கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம், கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது, இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்துக்குரிய அழிவடைந்த சிவாலயமும் அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திவாரங்களும் காணப்படுகின்றன. இங்கு ...
Read More »சஹ்ரானை கைது செய்ய 340 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட ...
Read More »ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலியா
ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு பகுதி அரசியல் கட்சியாகவும், ஒரு பகுதி ஆயுதக் குழுவாகவும் மற்றொரு பகுதி லெபனானின் ஷியா சமூகத்திற்கு அடிப்படை சேவைகளை வழங்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின அனைத்து பிரிவுகளையும் பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. லெபனான் மீது கணிசமான அதிகாரம் செலுத்தி வரும் இந்த இயக்கத்தின் ஆயுதப் பிரிவுகள் மீதான தடையை நீட்டித்துள்ளது. ஈரான் ஆதரவு கொண்ட ஷியா குழுவானது, ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் உள்துறை மந்திரி கரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். ...
Read More »