ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது
இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
இது பற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி கூறுகையில், “இயற்கையாகவே நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன. மேலும் இது குளிர்காலத்தின் தொடக்கம்தான்” என குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்கள், தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.