இதற்கமைய, இன்றைய தினம் (26), குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதியன்று, கிளிநொச்சி நீதிமன்றத்தில், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால், 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்துக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில், மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal