அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் திகதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள். இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன்!
அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த வாரம் ...
Read More »வருடத்தின் இறுதிக்குள் தேர்தல்!- எஸ்.பி.திஸாநாயக்க
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறை குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதும் இவ் வருடத்தின் இறுதிக்குள் கால எல்லை முடிவடைந்த அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த தயராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் பதவிகாலமானது கடந்த 2017 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணசபைகளுக்குமான கால எல்லையும் நிறைவுக்கு வரவுள்ளது. ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறுக் கோரி ...
Read More »அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை!
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவருக்கே நீதிமன்றம் நேற்று (07.06.2018) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதில் 9 ஆண்டுகள் அவர் கட்டாயம் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் குறித்த இலங்கையர் சென்றிருந்தார். அப்போது தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் ...
Read More »கீத்நொயர் தாக்கப்பட்டமை தொடர்பாக மகிந்தாவிடம் விசாரணை!
ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தினை பெறவுள்ளனர். சபாநாயகர் கருஜெயசூர்ய கீத்நொயர் விவகாரம் குறித்து வழங்கியுள்ள வாக்குமூலத்தை தொடர்ந்து சில சந்தேகங்களிற்கு தீர்வை காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலத்தை பெறவேண்டியுள்ளது என காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வாக்குமூலத்தை பெறுவதற்கு உகந்த திகதியை தெரிவிக்குமாறு காவல் துறை மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கீத்நொயர் கடத்தப்பட்டது தெரியவந்ததும் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக அவரை உயிருடன் மீட்க ...
Read More »அவுஸ்திரேலியாவில் கார் வைத்திருப்பவர்களுக்கு!
வாகன விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது அவசியம். வாகனத்திலுள்ள சில lights விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும். கார்களின் முன்-பின் புறம் இருக்க கூடிய fog light களை மூடுபனி மற்றும் மழையான காலநிலை தருணத்தில் வாகன சாரதிகள் சரியாக பார்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைத் தவிர்த்து பயன்படுத்தும் தருணங்களில் அபராதம் கட்ட நேரிடும். எவ்வளவு அபராத தொகை கட்டவேண்டும் தெரியுமா? இதோ அபராத தொகை நியூ சவுத் வேல்ஸ்- 110 டொலர்கள்- 2 demerit points விக்டோரியா- ...
Read More »360 டிகிரி கமரா!
எமது விருப்பத்துக்கு ஏற்ப 360 டிகிரியிலோ அல்லது 180 டிகிரியிலோ படங்கள், காணொளிகளை எடுக்க உதவும் சிறிய கமரா. நேரடியாக ஸ்ட்ரீம் செய்யும் வசதி, படம் எடுத்தபின் ஃபோகஸ் செய்யும் வசதி உடையது. க்யூஓ கேம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Read More »வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ட்ரம்ப் சம்மதித்ததார்!
வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார். இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது. ...
Read More »மருதங்கேணி பிரதேசசெயலகத்தை முடக்கி முற்றுகைப்போராட்டம்!
தென்னிலங்கை மீனவர்களை விரட்ட நீரியல்வள அமைச்சருடன் பேசச்சென்ற சுமந்திரனின் நிலை தெரியாதுள்ள நிலையில் மீனவ அமைப்புக்கள் மருதங்கேணி பிரதேசசெயலகத்தை முடக்கி போராட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடில்களை அமைத்து தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள். முறையற்ற வகையில் கடல் அட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களினை தட்டி கேக்கும் உள்ளூர் மீனவர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே பிரதேச செயலக முற்றுகை போராட்டத்தை தாண்டியும் கடலட்டை பிடிப்பது தொடர்ந்தால், கடலட்டைக்கு ...
Read More »ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்த ஜேம்ஸ் சதர்லெண்ட் 2001-ம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்து வந்தார். இது தொடர்பாக சதர்லெண்ட் கூறியதாவது:- 20 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். ...
Read More »