அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பு வட கொரியாவிற்கு ஒரு புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை பிரதிபலிக்கும். உண்மையை சொல்லப் போனால் உலகிற்கு ஓர் ஒரு பிரகாசமான புதிய எதிர்காலம். இந்த சந்திப்பு சுமூகமாக முடிந்தால் அடுத்த 5 நாட்களுக்குள் கிம் ஜாங் அன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என தெரிவித்தார்.