கீத்நொயர் தாக்கப்பட்டமை தொடர்பாக மகிந்தாவிடம் விசாரணை!

ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தினை பெறவுள்ளனர்.

சபாநாயகர் கருஜெயசூர்ய கீத்நொயர் விவகாரம் குறித்து வழங்கியுள்ள வாக்குமூலத்தை தொடர்ந்து சில சந்தேகங்களிற்கு தீர்வை காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலத்தை பெறவேண்டியுள்ளது என காவல் துறை  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வாக்குமூலத்தை பெறுவதற்கு உகந்த திகதியை தெரிவிக்குமாறு காவல் துறை மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கீத்நொயர் கடத்தப்பட்டது தெரியவந்ததும் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக அவரை உயிருடன் மீட்க முடிந்தது என சபாநாயகர் சிஐடியினரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.