பருத்தித்துறை பகுதியல் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த கால யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு , மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே!
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியா ஓமந்தையில் நேற்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன உறவுகள் தங்களுக்கு ஒரு நீதி வேண்டி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ...
Read More »வெலிக்கடை வழக்கு மூன்று நாட்கள் விசாரிக்கப்படும்!
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது 27 சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (30) தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வெலிக்கடை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினருடன் ஏற்பட்ட மோதலின்போது 27 சிறைக்கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »நியூயார்க்கில் தாக்குதல் நடத்த சதி- ஐஎஸ் ஆதரவாளர் கைது!
அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில், ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான செயல்களில் ஒரு வாலிபர் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த வாலிபரின் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல் துறை நேற்று அவரை கைது செய்தனர். விசாரணையில், 19 வயது நிரம்பிய அந்த வாலிபர், பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களின் ஆதரவாளராக மாறியது ...
Read More »நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறுவர்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நரபலி கொடுக்கப்பட்ட சிறுவர்களின் உடல் எச்சங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்களே இவ்வாறு பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோவிற்கு அருகே கண்டெடுத்துள்ளனர். இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் ...
Read More »பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார்! இரு குழந்தைகளும் கதறினார்கள்!
ஈழ தமிழ் தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழ தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரி போரடி வரும் ஹோம் டு பைலோ அமைப்பு தனது டுவிட்டர் மற்றும் முகநூல்களில் இதனை தெரிவித்துள்ளது. நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஆதரவாளர்கள் விமானநிலையம் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது ...
Read More »பேராயர் ஜஸ்டின் வெல்பி சிறிலங்கா பயணம்!
அங்கிலிக்கன் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டு இன்று (29) காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரது விஜயத்தில், அவருடைய பாதிரியார் உள்ளிட்ட மேலும் சிலர் வருகைதந்துள்ளனர். இவர்களை, அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளனர். பேராயர் உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 31 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளனர். அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டு ...
Read More »மஹிந்த – தயாசிறி – கோட்டா சந்திப்பு
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, மற்றும் அக்கட்சியின் பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
Read More »டிரம்ப் மனைவி, வடகொரியா தலைவர் ரகசிய சந்திப்பா?
ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியாவும், வடகொரிய தலைவரும் இதுவரை தனியே சந்தித்ததில்லை” என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. பிரான்சில் நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டுக்கு இடையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா உடனான விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், “பல்வேறு வளம் மற்றும் திறன் கொண்ட நாட்டை கிம் ஜாங் அன் நிர்வகித்து வருகிறார். அவரை பற்றி எனக்கும், எனது மனைவிக்கும் நன்கு தெரியும்” என கூறினார். வடகொரிய தலைவர் குறித்து, மெலானியாவுக்கு நன்கு தெரியும் என டிரம்ப் பேசியது பரபரப்பை ...
Read More »அமேசன் காட்டுத் தீயை விடவும் அங்கோலாவில் பரவிய மும்மடங்கு காட்டுத்தீ
அமேசன் பிராந்தியத்தில் பரவிவரும் காட்டுத் தீ குறித்து சர்வதேச ரீதியில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலகளாவிய காட்டுத் தீக்கள் தொடர்பில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள உலக வரைபடமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. ஏனெனில் அந்த வரைபடம் அமேசன் பிராந்தியத்தில் பரவிவரும் காட்டுத் தீயை விடவும் அதிகளவான காட்டுத் தீக்கள் மத்திய அமெரிக்காவில் பரவி வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது கடந்த வாரம் இரு நாட்கள் காலப் பகுதியில் அங்கோலாவில் மட்டும் பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட் ...
Read More »