அங்கிலிக்கன் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான பேராயர் பேரருட் திரு.ஜஸ்டின் வெல்பி, மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டு இன்று (29) காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரது விஜயத்தில், அவருடைய பாதிரியார் உள்ளிட்ட மேலும் சிலர் வருகைதந்துள்ளனர். இவர்களை, அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளனர்.
பேராயர் உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 31 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு- கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டதன் பின்னர், கண்டி மற்றும் குருநாகல் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal