குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் முழுமையாக திரும்பப் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்டது. ஆனால், ‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் ‘ என்ற கோட்பாட்டின் கீழ் அது சுயாட்சிப் பிராந்தியமாகவே இருந்தது. 2047 ஆம் ஆண்டில் ஹொங்கொங் முழுமையாக சீனாவுடன் ஒன்றிணைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் கொண்டு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்!
இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் ...
Read More »அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சிலாபம் காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம், சுதுவெல்ல பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பலாலி, மாங்குளம் மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 44 வயதுடையவர்கள் ஆவர். ...
Read More »திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்!
மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். சோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும், 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார். மேலும் இவர் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு ...
Read More »சவேந்திர சில்வாவின் நியமனம்! உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்!- அமெரிக்கா
யுத்த குற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவரை இலங்கை இராணுவதளபதியாக நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையுடனான பாதுகாப்பு உறவினை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துகொள்ளவேண்டியநிலையேற்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மனித உரிமை தொழிலாளர் பணியகத்தின் உதவி செயலாளர் ரொபேர்ட் ஏ டெஸ்டிரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் விசாரணை குழு முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்ற ஒரு தருணத்தில் சவேந்திரசில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் இலங்கையின் அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ...
Read More »கூடுகிறது கூட்டமைப்பு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பினை அடுத்து 13 அம்சக் கோரி க்கைகளை முன்னிறுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும் பேச்சு வார்த்தை நடத்த பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானம் எடுத்துள்ளன. அதன்படி இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் வெள்ளிக்கிழமைமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து ...
Read More »யாழில் நாளை மறியல் போராட்டம்?
யாழ்.மாவட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை விடுதலை செய்யக்கோாி யாழ்.மாவட்ட மீனவா்களால் முன்வைக்கப்பட்ட சகல கோாிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை புதன் கிழமை யாழ்.இந்தி ய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு தீா்மானித்துள்ளோம். மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சங்கங்களின் சம்மேளன தலைவா் வே.தவச்செல்வம் கூறியுள்ளாா். குறி த்த விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெ ரி விக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 ...
Read More »இங்கிலாந்தில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் பலி!
இங்கிலாந்தில் விருந்துபசாரமொன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் 17 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இளைஞர்கள் மீது ...
Read More »கோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாது!
கோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி வயற் காடுகளுக்குள் மறைந்து வாழுகின்ற ஒரு சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். ஜனநாயகத்தையும் அமைதியையும் விரும்பும் பெரும்பாலான மக்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்கள். ...
Read More »கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை!
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக்கோரிக்கைகளை முன்வதோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய ஐந்து தமிழ் கட்சிகளும் இந்த வாரத்தில் ...
Read More »