பெட்ரோல் டேங்கர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஹெய்தி அரசு அறிவித்துள்ளது. கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைட்டியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை சந்தித்தது. அப்போது அந்த லாரியில் இருந்த வெளியேறிய பெட்ரோலை கண்ட அருகில் இருந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதன் உறுப்பினராக வணக்கத்துக்குரிய களுபஹன பியரதன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார்
Read More »பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் பிணையில் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 வயதான பாலகிருஸ்ணன் ரதிகரன் என்ற இளைஞனுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் இன்று (14.12.2021) திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செளியனின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார். மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் மாவீரர் தினத்தையொட்டி கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக ...
Read More »உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்
துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதுகுறித்து, எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த ...
Read More »மன்னாரில் காணி அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், இன்று (13) காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் மேற்குப் பகுதியில் வனவளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கை இன்று (13) காலை இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, குறித்த பகுதிக்கு வனவளத் திணைக்களத்தினர் காணிகளை அளவிடுவதற்காக சென்றிருந்தனர். இதன்போது அங்கு ஒன்றுகூடிய குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக, காணி அளவிடும் பணிகளை ...
Read More »81 ரக எறிகணைக் குண்டுகள் 16 மீட்பு
மட்டக்களப்பு குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்திலிருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக காகித ஆலை விசேட அதிரடிப்படையுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, இவ்வாறான குண்டுகள், ஆயுதங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இவ்வாறான குண்டுகள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் தொடர்பில் ...
Read More »அவுஸ்திரேலியா – தென் கொரியா இடைய 717 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தம்
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் 717 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் திங்களன்று கான்பெர்ராவிற்கான மூனின் நான்கு நாள் பயணத்தின் போது கைச்சாத்திடப்பட்டது. கொவிட் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தென் கொரிய ஜனாதிபதி ஆவார். புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தென் கொரிய பாதுகாப்பு நிறுவனமான ‘Hanwha’ அவுஸ்திரேலியா இராணுவத்திற்கு பீரங்கி ஆயுதங்கள், ...
Read More »பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல்
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் திகதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக ...
Read More »தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுப்பினர்களை நியமித்துள்ளார். 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண்.12 இன் விதிகளின்படி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதியான உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஒய்வு பெற்ற நீதிபதி ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாவர்.
Read More »ஈஸ்டர் சந்தேநபர்கள் மீது கைதிகள் தாக்குதல்
பதுளை சிறைச்சாலையில் விசேட சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வர், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேநகபர்கள் நால்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சந்தேநகபர்கள் நால்வர் மீதே, கைதிகள் நால்வரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 10 ஆம் திகதியன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அன்றையதினம் இரவு உணவைப் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal