அவுஸ்திரேலியாவில் பழங்களுக்குள் ஊசிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மாம்பழத்தினுள் ஊசி காணப்பட்டதாக பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். ஏற்கனவே அவுஸ்திரேலியா முழுவதும் ஸ்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு ஸ்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பழங்கள் தொடர்பான பரபரப்பு மேலும் இரட்டிப்பானது. இதையடுத்து ஆப்பிள் பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிய பின்னணியில் தற்போது மாம்பழத்திற்குள் ஊசி காணப்பட்டதாக நியூ சவுத் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார்!- தளபதி தர்சன ஹெட்டியாராச்சி
யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ். மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.. அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்கவுள்ளோம். யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை ...
Read More »அவுஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவு!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவினால் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள ஹோட்டலொன்றில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கண்கடி மற்றும் எரிச்சல் ஆகிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pullman Sydney Hyde Park ஹோட்டலில் உதவியாளர் ஒருவர் நீச்சல் தாடகத்துக்குரிய குளோரினுடன் இன்னொரு இரசாயன பதார்த்தத்தை கலந்துள்ளார். அப்போது குறித்த திரவக் கலவையிலிருந்து வெளிவந்த புகை 22 வது மாடியின் வழியாக பல்வேறு ...
Read More »படகு கவிழ்ந்து விபத்து – 44 பேர் பலி!-தான்சானியா
தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும். இந்நிலையில், தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் ...
Read More »இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது !
இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரால் இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More »ஆர்னோல்டின் முடிவு திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்! -காக்கா
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன. ...
Read More »தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் மீது தாக்குதல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள் இருந்துள்ளார். ஆனாலும் பலர் புகுந்து சத்தத்துடன் அடித்து சேதப்படுத்தியமையால் ...
Read More »படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன!-சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அறிக்கை
இலங்கையில் தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் ஐடிஜேபீ அமைப்பு இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு வருடகாலமாக குறிப்பிட்ட அமைப்பினால் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து ஐடிஜேபீ அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அமைப்பு யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் படையினரால் ...
Read More »இரண்டு Mi ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சியோமி!
சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 AIE, 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமராக்கள், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. போனின் டிஸ்ப்ளேவில் ...
Read More »மோடிக்கு இம்ரான் கான் கடிதம்!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், ...
Read More »