சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனம் Mi 8 லைட் மற்றும் Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 AIE, 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமராக்கள், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
போனின் டிஸ்ப்ளேவில் வெவ்வேறு விதமாக செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக வித்தியாசமான நிறங்களை பிரதிபலிக்கும். இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் கைரேகை சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi 8 லைட் சிறப்பம்சங்கள்:
– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல்
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 1.8um பிக்சல்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
சியோமி Mi 8 லைட் ஸ்மார்ட்போன் அரோரா புளு, சன்செட் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi 8 லைட் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் இந்திய மதிப்பில் ரூ.14,835, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1699 யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,020 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1999 யுவான் இந்திய மதிப்பில் ரூ.21,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரெஷர் சென்சிட்டிவ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கைவிரலை திரையில் வைத்ததும், ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் Mi 8 மாடலில் உள்ளதை விட 29% வரை வேகமாக இயங்குகிறது.
சியோமி Mi 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.21 இன்ச் 2248×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8, OIS
– 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.4, 1.0μm பிக்சல்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பிரெஷர் சென்சிட்டிவ் கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவிக் சார்ஜ் 4 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி Mi 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்செட் கோல்டு, பிளாக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் டைட்டானியம் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 3199 யுவான் இந்திய மதிப்பில் ரூ.33,945 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 3599 யுவான் இந்திய மதிப்பில் ரூ.38,192 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.