வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள்! – செல்வம்
அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். காணாமல்போனோர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கத்திடமிருந்து சர்வதேசத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத நீதியை பிளவு பட்ட தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியுமா? தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும். அவர்களின் ஒற்றுமையும், பதவியும் தான் அரசுக்கு ...
Read More »இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா!
வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து ...
Read More »துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவரை நேரில் பார்த்தேன்!
அமெரிக்காவின் எல்பசோ நகரில் உள்ள வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை நேரில் பார்த்தேன் என எல்பசோவை சேர்ந்த வனேசா சயின்ஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். முதலில் சத்தம் கேட்டவேளை நான் பட்டாசுகள் என நினைத்தேன் ஆனால் வணிக வளாகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்வதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் அந்த சத்தங்கள் வேறு மாதிரியானவையாக தோன்றுகின்றன என தெரிவித்ததை தொடர்ந்து நான் வோல்மார்ட்டிற்குள் நுழைந்து அங்கு மறைந்திருக்கலாம் என நினைத்து உள்ளே நுழைந்த வேளை நபர் ஒருவரை ...
Read More »வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்!
சைவத் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைத்தலை நிறுத்துதல், வடகிழக்கில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டம் நடைமுறைப்படுத்துவதை தடை செய்தல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை இந்து அமைப்புக்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது. அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நல்லை ஆதீனம் முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் பேசும் ...
Read More »நல்லூர் பாதுகாப்பிற்காக 8 சோதனைக் கூடங்கள் !
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று நேரில் ஆராய்ந்தனர். அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 இலட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக 4 கூடுகள் தேவை என பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 25 நாட்கள் ...
Read More »ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நவாஸ் செரீப் உறவினர்கள்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் யூசுப் அப்பாஸ் மற்றும் அப்பதுல் அஜிஸ். சகோதரர்கள் ஆன இருவரும் நேற்று முன்தினம் ஹஜ் புனித பயணத்திற்காக லாகூரில் இருந்து மதினா செல்லும் விமானத்தில் ஏறி இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாக குடியுரிமை அதிகாரிகள், அவர்கள் பயணத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புதிய ...
Read More »வவுனியாவில் பொருத்தப்பட்ட 5ஜி கோபுரம்!
வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதுடன் 5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா?
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஜேஎம்டீ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 ...
Read More »கைதிகளை வாகனத்தில் மாற்றும்போது விபரீதம் : 4 கைதிகள் மூச்சுத் திணறி பலி!
வட பிரேசிலில் கலவரம் இடம்பெற்ற சிறைச்சாலையொன்றிலிருந்து வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட 4 கைதிகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். பரா பிராந்தியத்தில் அளவுக்கதிகமான கைதிகளைக் கொண்ட சிறைச்சாலையில் இரு எதிர்க் குழுக்களைச் சேர்ந்த கைதிகளிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் 57 கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அந்த சிறைச்சாலையிலிருந்து அபாயகரமான சில கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரக் வண்டியில் அமைக்கப்பட்ட கைதிகளுக்கான 4 வேறுபட்ட பிரிவுகளில் 30 கைதிகள் கொண்டுசெல்லப்பட்டனர். இதன்போதே 4 கைதிகள் மூச்சுத் ...
Read More »