இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று 06-02-2021 சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. சிட்னி பரமட்டா நகரில் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் இளையவர்கள் முதல் மூத்தவர்கள் என பெருமளவான தமிழ் மக்களோடு பல்லின சமூகமக்களும் என பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இளம்செயற்பாட்டாளர் ரேணுகா இன்பகுமார், நியுசவுத் மாநில அவை உறுப்பினர் Dr Hugh Mcdermott, அவுஸ்திரேலிய முன்னாள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை சிறிலங்கா திருப்பி கொடுத்தது பின்னணியில் சீனா?
இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் சிறிலங்காவுக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் டிசில்வா கூறியுள்ளார். சிறிலங்காவின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையத்தை மேம்படுத்த சிறிலங்காவுடன் இந்தியாவும் – ஜப்பானும் முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை சமீபத்தில் சிறிலங்கா அரசு தன்னிச்சையாக ரத்து செய்தது. தொழிற்பூங்காக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இப்பணி சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் கீழ் ...
Read More »யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறித்த கண்டு பிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமனாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வையிட்டதுடன் குறித்த தொழில்நுட்ப ...
Read More »சுதந்திரம் கிடைத்ததா? எல்கே தளங்கள் மீது சைபர் தாக்குதல்!
எல் கே (lk) டைாமைனின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல இணையதளங்கள் மீது இன்று (6) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது என இலங்கை கணனி அவசர ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் எல்கே டொமைன் தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தளங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என்ற கூற்றுடன் அடங்கிய தகவல் ஊடுருவப்பட்ட தளங்களில் பதிவாகியுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தல், ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைக்கமுயலவேண்டாம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். 73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என ...
Read More »ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்
மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ...
Read More »இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண கூறினார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் ...
Read More »கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம்…….!
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை முஸ்லீம்சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற உறுப்பினர் ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார் சுகாதாரத்திற்கு அவசியமானது என்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை,மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது என்பதை அவர்கள் அறிந்ததுதம் அது அவர்களை உலுக்கியுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை பூமிக்கு ஒப்படைக்கவேண்டும் என்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கை என்பதால் ...
Read More »அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வு
தமிழர்களுக்கான நீதியை கோரி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தொடர் போராட்டம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சிவில் செயற்பாட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை தாயகத்தின் அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் வழங்குகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கில் தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன. தமிழ் மக்களின் கலை பண்பாட்டு ...
Read More »யாழில் நான்கு நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த நீதிமன்றம் தடை
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தப் காவல் துறையினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல் துறை தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை ...
Read More »