கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம்…….!

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை முஸ்லீம்சமூகத்தினரை பெருமளவிற்கு உலுக்கியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்ற உறுப்பினர் ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார்

சுகாதாரத்திற்கு அவசியமானது என்ற எந்த நம்பிக்கையுடனும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கை பின்பற்றப்படவில்லை,மாறாக முற்றிலும் இனவாத அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்படுகின்றது என்பதை அவர்கள் அறிந்ததுதம் அது அவர்களை உலுக்கியுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களை பூமிக்கு ஒப்படைக்கவேண்டும் என்பது அவர்களின் அடிப்படை நம்பிக்கை என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு இது மோசமான விடயமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மூலம் வைரஸ்பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள சுமந்திரன் முஸ்லீம் சமூகம் கொங்கிரீட் கல்லறைகள் போன்றவற்றில் உடல்களை வைப்பதற்கும் முன்வைந்தது ஆனால் அரசாங்கம் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை உறுதியாக நிராகரித்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க விரும்பவில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கு மறுக்கும் நாடு நான் அறிந்த வகையில் இலங்கையே என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.