ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 25 பைலட் திமிங்கலங்கள் செத்து ஒதுங்கிய நிலையில், 270 உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். அதில் 25 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 270 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், டாஸ்மானியா ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்
கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக உலகமே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் பேரின் உயிரைப்பறித்திருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வேலைக்கு இதுவரை பொதுவாக எக்ஸ்ரேதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஏ.ஐ. என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அதிக செயல்திறனை ...
Read More »இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும்
19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தத்தில் அநேக சாதகமான அம்சங்கள் இருந்ததால் அதை முற்றாக நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார். “தகவல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் விதிகள், ஜனாதிபதிக்கான 5 ஆண்டு வரையறை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய எண்ணிக்கையை இரண்டாக வரையறுத்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டோரை தேர்தலில் போட்டியிடாது தடுத்தல் போன்ற 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட நல்ல பல ...
Read More »கிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை
கிளிநொச்சியில் இன்று இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் க.பொ. உயர்தரப்பரீட்சையில் வணிகத்துறையில் 3 ஏ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக்கான காரணங்கள்வெளியாகாத அதேவேளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Read More »புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்
சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக ...
Read More »தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும்
தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் எனவும் திலீபன் தினைவு நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற திலீபன் நினைவு தினம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில்; ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமர் தமிழர்களுக்கு அநீதி இழைக்க மாட்டோம் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். உண்மையில் இவர்களின் இக்கூற்றுகள் ...
Read More »ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி !
கொரோனா பெருந்தொற்று சூழலினால், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பயண முடக்கம், விசா பரிசீலணையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது. தற்போதைய கணக்குப்படி, கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவின் 2019-20 நிதியாண்டில் 140,366 வெளிநாட்டினருக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, அரசு திட்டமிட்ட 160,000 என்னும் எண்ணிக்கையை விட குறைவானது. கடந்த பத்தாண்டின் சராசரியே 175,000 எண்ணிக்கையாக உள்ள நிலையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. சர்வதேச பயணத்திற்கு ...
Read More »14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்
தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ்க் கட்சிகளின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று பகல் இதற்கான கடிதத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் 14 முக்கியஸ்த்தர்கள் கையொப்பமிட்டனர். வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்கள். இந்தக் கடிதத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி, தமிழ் தேசியக் கட்சி, ...
Read More »ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 42 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; 8 பேர் மாண்டனர். சென்ற மாதத் தொடக்கத்தில் கிருமித்தொற்று உறுதியாவோரின் அன்றாட எண்ணிக்கை 700க்கும் அதிகமாகப் பதிவானது. அண்மை நாள்களில் அது ஈரிலக்கத்துக்குக் குறைந்துள்ளது. அதனையடுத்து மாநில அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews)கூறியுள்ளார். இருப்பினும், மாநிலத் தலைநகர் மெல்பர்னில் இம்மாதம் 28ஆம் திகதி வரை கடுமையான முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More »முகக்கவசங்களை திருப்பி அனுப்பிய வடகொரியா
தென்கொரியாவில் செய்யப்பட்ட முகக்கவசங்களை வடகொரியா திருப்பி அனுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “வடகொரியாவில் முகக்கவசத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனாவிலிருந்து வந்த முகக்கவசங்களை வடகொரியா திரும்ப அனுப்பியுள்ளது. அந்த முகக்கவசங்கள் அனைத்தும் தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டதால் அவை திரும்ப அனுப்பப்பட்டதாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு ...
Read More »