Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ஜெப் பெசோஸ். இவர் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலன் மாஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை ‌ ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் – பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுளின் வெற்றிடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘பிங்’ தேடுபொறி நிரப்பும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுளின் ...

Read More »

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது தொடர்பில் காவல் துறை  சோதனை செய்து வருகின்றனர். வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், ...

Read More »

இலங்கையில் கொரோனா தடுப்பு மருந்தினை பயன்படுத்தியவர்கள் வழமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்திய பலர் வழமையான பக்கவிளைவுகள் குறித்து தெரிவித்துள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தியவர்களில் குறிபிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வழமையான பக்கவிளைவுகளை எதிர்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்தினை பயன்படுத்தியவரின் உடல் எவ்வாறு அதனை எதிர்கொள்கின்றது என்பதற்கான அறிகுறி இந்த பக்கவினைவுகள் என அரசமருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோhனா தடுப்பூசியை பயன்படுத்திய பின்னர் சிறிய காய்ச்சல் மூட்டுவலிகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர் என அரசமருத்துவ ...

Read More »

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனைவிடுத்து, ‘அமைதி தூபி’ எனும் பெயரிலையோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி ...

Read More »

இராணுவப் புரட்சி சட்டவிரோதமானது; ஆங் சாங் சூச்சியை விடுதலை செய்க!

மியான்மர் நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சாங் சூச்சி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தலைவர்களை விடுவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி ...

Read More »

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்ள சாணக்கியனிற்கு தடை

வடகிழக்கில் தொடரும் இன அழிப்பிற்கு எதிரான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் போது மக்களை தூண்டிவிட தமிழ்தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் இந்தப்போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் செய்த முறைப்பாட்டின் கீழ் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Read More »

ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு ...

Read More »

குடியியல் உரிமை பறிபோகும் அபாயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சார்பில், ஜனாதிபதி செயலாளர் கையொப்பத்துடன், ஜனாதிபதி விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவானது குடியியல் உரிமைகளைப் பறிக்கும் பரிந்துரைகளை முன்வைக்கக்கூடிய விசேட அதிகாரம் கொண்ட ஆணைக்குழுவாகும். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, இலக்கம் 8,9,10 ஆகியவற்றுக்கான தீர்மானங்களை எடுக்கும் பரிந்துரைகளை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்வைக்க முடியும். அவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படுமாயின், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அக்கூட்டமைப்பின் ...

Read More »

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்; மேன்முறையீட்டு!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா ...

Read More »