Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது

தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின்   செயலாளர் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: ...

Read More »

சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் கடிதம்…..

தன்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சபையின் கவனத்துக்கும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றதை அடுத்து, அதுதொடர்பில், தேடியறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, காவல் துறை மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றையும்  அனுப்பிவைத்துள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் தேடியறிந்து, தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறே, சபாநாயகர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ...

Read More »

மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் மாமனிதர், பேராசியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள், இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை அதை தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும். இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ...

Read More »

மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை ...

Read More »

யாழில் 24 வாரத்தில் பிறந்த குழந்தையை சுகதேகியாக மாற்றி மருத்துவர்கள் சாதனை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத கர்ப்பவதியாக இருந்த அன்று குற்றுக் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மந்திகையில் அனுமதிக்கப்பட்ட தாயார் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருந்தபோதும் உடனடியாக குழந்தை பிரவசித்தார் சாதாரணகர்ப்ப காலம் 40 வாரமாக உள்ளபோதும் 24 வார கர்ப்பத்தில் பிறந்த ; குழந்தையின் நிறை 600 கிராம் மட்டுமே ...

Read More »

ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இருக்க வேண்டும்

தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளைக் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ்மக்கள் ...

Read More »

ஐ நா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மெலும் தெரிவிக்கையில், ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபை கோ குரூப் நாடுகள் வெளியிட்டுள்ளன. குறித்த வரைபு வெளியிடுவதற்கு முதல் இங்கு இருக்கக்கூடிய கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடிதம் ஒன்றை மனித உரிமை ஆணையாளருக்கும் உறுப்பு நாடுகளிற்கும் விசேடமாக ...

Read More »

ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம்

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44) மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் நவால்னி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ...

Read More »

முகநூலில் செய்திகளை பார்வையிட முடியாத நிலையில் அவுஸ்திரேலிய மக்கள்

அவுஸ்திரேலிய மக்கள் முகநூலில் செய்திகளை பார்வையிடுவதையும் பகிர்ந்துகொள்வதையும் பேஸ்புக் தடை செய்துள்ளது. அவுஸ்திரேலிய மக்கள் சர்வதேச உள்நாட்டு செய்திதளங்களை பார்வையிடுவதை பேஸ்புக்தடை செய்துள்ளது. அரசாங்கத்தின் சுகாதார அவரசசேவை மற்றும் ஏனைய இணையத்தளங்களையும் பேஸ்புக் தடைசெய்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ளவர்கள் அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளங்கள் எவற்றையும் முகநூல் மூலமாக பார்வையிட முடியாத நிலை காணப்படுகின்றது. அவுஸ்திரேலிய அரசாங்கம் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை அதன் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கை பேஸ்புக்கின் கௌரவத்திற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அதுசிந்திக்கவேண்டும் என ...

Read More »

தனித் தமிழீழத்துக்கு வித்திடும் சரத் வீரசேகர

ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும் எனும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்குத்தனித் தமிழீழத்தைப் பெற்றுத்தந்து விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அதேநேரம் வடக்கு, கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்றே சரத் வீரசேகர செயற்படுகின்றார். ஆகவே, தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது எனக் கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். மன்னாரில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் ...

Read More »