ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44) மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் நவால்னி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நவால்னியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.
Eelamurasu Australia Online News Portal