அவுஸ்திரேலிய மக்கள் முகநூலில் செய்திகளை பார்வையிடுவதையும் பகிர்ந்துகொள்வதையும் பேஸ்புக் தடை செய்துள்ளது. அவுஸ்திரேலிய மக்கள் சர்வதேச உள்நாட்டு செய்திதளங்களை பார்வையிடுவதை பேஸ்புக்தடை செய்துள்ளது.
அரசாங்கத்தின் சுகாதார அவரசசேவை மற்றும் ஏனைய இணையத்தளங்களையும் பேஸ்புக் தடைசெய்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ளவர்கள் அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளங்கள் எவற்றையும் முகநூல் மூலமாக பார்வையிட முடியாத நிலை காணப்படுகின்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை அதன் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கை பேஸ்புக்கின் கௌரவத்திற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அதுசிந்திக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் தொடர்பாடல் போல் பிளெச்சர் தெரிவித்துள்ளார்.
முகநூலில் செய்திகளை பார்வையிட முடியாத நிலையில் அவுஸ்திரேலிய மக்கள் – பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை
சமூக ஊடக நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் செய்தி உள்ளடக்கங்களிற்காக அந்த செய்தி நிறுவனங்களிற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தேச சட்டத்திற்கு எதிராகவே பேஸ்புக் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
கூகுள் பேஸ்புக்போன்ற இந்த உத்தேச சட்டத்தை எதிர்த்துள்ளதுடன் இந்த சட்டம் இணையம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தவில்லை தங்களின் தளங்களை நியாயமற்ற விதத்தில் தண்டிக்கின்றது என தெரிவித்துள்ளன.
எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.