தன்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சபையின் கவனத்துக்கும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றதை அடுத்து, அதுதொடர்பில், தேடியறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, காவல் துறை மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் தேடியறிந்து, தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறே, சபாநாயகர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal