Tag Archives: ஆசிரியர்தெரிவு

குண்டுகளுடன், ‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்!

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர காவல் துறை  இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, #. WP BCY- 2183 (Black Red TVS Scooty #. NWP VP 7783 (Midnight Black Bajaj pulsar 150) #. ...

Read More »

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்!

கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

Read More »

தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இக் கொடூரத் தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இறந்தவர்கள் பலரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் பலபாகங்களிலும் இடம்பெற்றதுடன் நேற்றைய நாள் துக்கநாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.

Read More »

நியூசிலாந்து மசூதி தாக்குதல்களுக்கு பழிவாங்க இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலா?

நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் 3 தேவாலயங்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. மேலும் 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 இந்தியர்கள் உள்பட 310 ...

Read More »

தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்!

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கான  பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

Read More »

ஃபர்தாவைத் தடைசெய்ய யோசனை!

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, சிறிகொத்தாவில் இன்று (23) இடம்பெற்ற ​ஊடகவியலாளர் மாநாட்டின் போது, முஜிபூர் எம்.பி கூறினார்.

Read More »

ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு!

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் இந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி தகர்க்கப்பட்டன. நேற்றும் வான் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. விமான நிலையம் அருகே 6 அடி நீளம் உள்ள பைப் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை விமானப்படை வீரர்களால் செயல் இழக்க செய்யப்பட்டது. இலங்கையை உலுக்கிய இந்த தொடர் ...

Read More »

சந்தேகத்தின் பேரில் சிரிய நாட்டுப் பிரஜை கைது!

இலங்கையில் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என, ராய்டர் செய்திச் சே​வை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக  விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Read More »

தாக்குதல்கள் இடம்பெறலாமென காவல் துறை தலைமையகம் எச்சரிக்கை!

நாட்டில் சகல காவல் துறை  பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தொடர்ந்து தாக்குதல்தாரிகளால் தாக்குதல்கள் இடம்பெறாமென,  காவல் துறை தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவகையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, காவல் துறை தலைமையகம் சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.

Read More »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள் சில அவசரகால சட்டத்தின் கீழ்…!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்கள சில, அவசரகால சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலினூடாக இன்று(22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. தேசிய பாதுகாப்புச் சபையுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நடத்திய அவசரச் சந்திப்பிலேயே ஜனாதிபதி இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

Read More »