தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இக் கொடூரத் தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இறந்தவர்கள் பலரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் பலபாகங்களிலும் இடம்பெற்றதுடன் நேற்றைய நாள் துக்கநாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.