இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் ‘விசேட வைப்புக் கணக்கு’ என்ற பெயரில் புதிய வங்கிக் கணக்கொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் இந்த மாற்று திட்டங்களை கையாள்கின்றது எனவும் கூறுகின்றது. நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் மக்களின் பொருளாதார தன்மைகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கூடும் கொரோனா நிவாரண வேலைத்திட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் ஜனாதிபதியின் அறிவுரைக்கு அமைய எடுக்கப்பட்டுள்ளது அதாவது ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
“சார்வரி” தமிழ் புத்தாண்டு இன்று பிறக்கிறது!
சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி 2020, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் ...
Read More »ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசிய தாய்!
கணவருடன் ஏற்பட்ட தகராறில் கல்நெஞ்ச தாய் ஐந்து குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். இங்கு மிரிதுல் யாதவ் – மஞ்சு தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் ஐந்து குழந்தைகள் இருந்தனர். கணவன் – மனைவிக்கு இடையே கடந்த ஒருவருடமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நேற்றிரவு கருத்து வேறுபாடு அதிகரித்து கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் மஞ்சு தனது குழந்தைகளை ...
Read More »வவுனியா மாவட்டத்தில் பட்டினியை எதிர்நோக்கும் அவல வாழ்வு !
வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்ந்து ; கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் ஊரடங்குச்சட்ட காலகட்டத்தில் கூலிவேலைகள் கூட கரம் கிட்டாமல் அன்றாடம் அரைவயிற்று கஞ்சிக்கே கஸ்டப்படும் நிலையில் வாழ்கின்றனர். நீங்கள் பார்க்கும் இடம் ஆடுமாடுகள் வசிக்கும் இடமல்ல மனிதன் வசிக்கும் கூடாரம் அதுவும் வவுனியா தவசிகுளம் ஆற்றங்கரையோர குடியிருப்பிலேயே இந்த இளம் குடும்பம் வசித்து வருகின்றது. இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் ஜேசுபுரம், கிறீஸ்தவகுளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம், கப்பாச்சி, வீரபுரம், மரையடித்தகுளம், ...
Read More »கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் மெல்பேர்னில் தரையிறங்கிய விமானம்!
உருகுவேயிலிருந்து 80 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் புறப்பட்ட விமானம் மெல்பேர்னில் தரையிறங்கியது. உருகுவேயில் தரித்து நின்ற கிரேக் மோர்டைமர் ஆடம்பர கப்பலில் காணப்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம்மெல்பேர்னில் தரையிறங்கியுள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் வைரசினால் பாதிக்கப்பட்ட 80 அவுஸ்திரேலியர்கள் உட்பட 112 அவுஸ்திரேலியர்களும் நியுசிலாந்து பிரஜைகளும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பயணிகளிற்கு கப்பலில் இருந்து இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் இறங்கி பேருந்துகளில் ஏறுவதை ...
Read More »அவுஸ்திரேலியாவில் கொரோனா பரப்பிய கப்பல்!
கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாண்ட அவுஸ்திரேலிய அரசு தன்னுடைய சிறிய தவறினால், இன்று நாட்டில் 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவ காரணமாகியுள்ளது. தெற்கு சிட்னி நகரில் உள்ள கெம்ப்லா துறைமுகத்தில் மார்ச் மாத துவக்கத்தில் ரூபி பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், பயணம் முடித்து வந்தடைந்தது. அது பின்னர் அடுத்த பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. அந்த கப்பலில், வந்தவர்களில் 158 பேர் உடல்நலம் குன்றி இருப்பதை கண்ட அரசு 9பேருக்கு கொரோனா சோதனை செய்தது. அதில், யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வரவில்லை. ...
Read More »கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபரிடம்
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக காவல் துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த காவல் துறை பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல் துறை தலைமையகம் இன்று விஷேட ; அறிவிப்பை விடுத்ததுடன், சிரேஷ்ட பிரதிப் காவல் துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ கொரோனா ஒழிப்பு தொடர்பிலானகாவல் துறை மா அதிபரின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவும், ; கீழ் மட்ட நிலையில் இருந்து ...
Read More »’கொரோனா தடுப்பூசிக்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்
கொரோனா வைரஸூக்கான தடுப்பூசியை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் தயாரிக்க முடியுமென, பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியை சாரா கில்பர்ட், இதற்கான பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது குறித்த தடுப்பூசியை அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்கு முதன் முதலில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Read More »ஒய்வு இல்லாமல் சவப்பெட்டிகள் தயாரிப்பு- பிரான்சில் வேதனை!
கரோனா வைரஸின் கோரத்தாண்டவம் ஐரோப்பிய நாடுகளை விழிபிதுங்கச் செய்யும் நிலையில் மரண விகித அதிகரிப்பால் சவப்பெட்டி தொழில்கள் கால நேரம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோபாவின் மிகப்பெரிய சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமான கிழக்கு பிரான்சில் உள்ள ஓஜிஎஃப் நிறுவனத்தில் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி சவப்பெட்டியை தயாரித்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக மொத்தம் 4 மாடல்களில் மட்டுமே சவப்பெட்டியை உருவாக்குவதாக தொழிற்சாலை இயக்குநர் இமானுயெல் காரெட் தெரிவித்தார், பொதுவாக 15 வகையான சவப்பெட்டிகள் உள்ளன என்கிறார் ...
Read More »சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை- அமெரிக்கா எச்சரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது. சீனாவின் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சீனா டெலிகாம்’ அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘சீனா டெலிகாம்’, ‘சீனா யூனிகாம்’ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது பற்றி ஆராய்வதற்காக தொலைத்தொடர்பு ஆணையம், பாதுகாப்பு, வெளியுறவு, ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			