கணவருடன் ஏற்பட்ட தகராறில் கல்நெஞ்ச தாய் ஐந்து குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். இங்கு மிரிதுல் யாதவ் – மஞ்சு தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
கணவன் – மனைவிக்கு இடையே கடந்த ஒருவருடமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நேற்றிரவு கருத்து வேறுபாடு அதிகரித்து கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் மஞ்சு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜஹாங்கிரபாத் காட் பகுதியில் உள்ள கங்கை நதியில் தூக்கி எறிந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தைகளை தேடிவருகின்றனர். பெற்ற குழைந்தகளை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே குழந்தைகளை ஆற்றில் வீச முயன்றபோது அங்குள்ள மீனவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் சூனியக்காரி என்று பயந்து குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.