Tag Archives: ஆசிரியர்தெரிவு

தெரிவுக்குழு விசாரணைக்கு ரணிலை அழைக்க தீர்மானம்!

சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்னாயக்க , ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் பிரதமர் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைக்கு ...

Read More »

கூட்­ட­மைப்பு ”மாமா”வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்!

கல்­முனை பிரச்­சினைக்குத் தீர்வு காணாமல் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு மாமா வேலை செய்து கால அவ­கா­சத்தை வழங்கப் பார்க்­கின்­றது. அவர்கள் இந்த மாமா­ வேலை செய்யும் பழக்­கத்தை நிறுத்த வேண்டும் என வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கோரி­யுள்ளார். அத்­துடன் உண்­ணா­வி­ர­தி­களின் கோரிக்­கைக்கு ஆத்­மார்த்­த­மான ஆத­ரவை வழங்­கு­வ­தோடு கல்­முனை கள நிலை­மை­களை நேரில் அறி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேரில் செல்­ல­வேண்டும் என்றும் கோரி­யுள்ளார். கனடா ‘வாணிபம்’ வியா­பார தகவல் கையேட்டு நிறு­வ­னத்­தி­னரின் நிதி அனு­ச­ர­ணையில் மக்கள் நலன் காப்­ப­கத்தின் ‘அன்­பகம் ‘ மூதாளர் மாதாந்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் புதிய தடை!

lightweight, single-use- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்கு வருகிறது. விக்டோரியா மாநிலத்தில் இந்த தடை நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் , துரித உணவு விற்பனை நிலையங்கள், மற்றும் எரிபொருள் சேவை நிலையங்கள் ஆகியவற்றில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஆனால் பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பாவிக்க தடை இல்லை. பிளாஸ்டிக் மாசுபாட்டினை குறைப்பதற்கு பல வழிகளில் ...

Read More »

இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றமை ஐஎஸ் தலைமைக்கு எவ்வாறு தெரியவந்தது?

ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம்பத்தில் அந்த அமைப்பிற்கு தெரியாது என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் உள்நாட்டை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஐஎஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை தொடர்புகொண்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள  அந்த நபர் ,மூன்றாம் தரப்பொன்றின் மூலமாக,  தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஜிகாத் தீவிரவாதிகளை ஐஎஸ் அங்கீகரிக்கவேண்டுமென மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார் ...

Read More »

இந்தோனேசியாவில் பாரிய தீ விபத்து : 30க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள  தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்படுவதற்கான தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,சம்பத்தில் காயடைமந்த தொழிலாளர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லையென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதலாவது கருணைக்கொலைக்கு விண்ணப்பித்த தாயார்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு அதனை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்களை விக்டோரியா மாநிலம் அறிமுகப்படுத்தியது. அது துணிச்சலான மாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. கருணைக் கொலைக்கு அனுமதி பெற வேண்டுமெனில், கடும் நோய் கொண்ட மூத்தோராகவோ, உயிர் வாழும் காலம் ஆறு மாதத்துக்கும் குறைவாகவோ இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். சில பாதுகாப்பு நடைமுறைகளும் அதற்காகச் செயல்படுத்தப்படவுள்ளன. தன்னிச்சை மறுஆய்வுக் குழுவினர், மரண விசாரணை நீதிபதி ஆகியோர் ...

Read More »

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை மோசம் !

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை ஆபத்தாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய பின்னரே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.   உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சீனி குறைந்து வருவதாகவும் இந்நிலை தொடர்ந்ததால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் உடனடியாக வைத்தியாசாலையில் அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதற்கு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை ...

Read More »

தாக்குதல்கள் குறித்த உண்மைகளை மறைக்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ...

Read More »

விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரினால், மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கப்படும். இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் ...

Read More »

கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்! – துருக்கி அதிபர்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் திகதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது. இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ...

Read More »