Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சம் மக்கள்!

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை ...

Read More »

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு !

ஊருபொக்கை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் கொட்டாவையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் பேச்சாரள் தெரிவித்தார். இதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இலக்கத் தகடற்ற வெள்ளைநிற வேன் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சந்தேகத்தில் 3 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், ஊருபொக்க பெரலபனாத்தர பிரதேசத்தில் இலக்கத் தகடற்ற வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்களால் நேற்றையதினம் அதிகாலை 6.00 மணியளவில் சுரங்க லக்மால் எதிரிசிங்க என்ற கூட்டுறவுப் பணிப்பாளர் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

2020 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

ஜனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தனக்கு சாதகமான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக. 2020 பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார் என்று, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார். எத்தகைய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கான அவசர விபத்து சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதிக்காக  ஒதுக்கப்பட்ட 2,000 மில்லியன் ரூபாய் நிதியின் மூலம், அவ்வேலைத் திட்டம் நிச்சயமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கல்முனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அஹமட் அலி வைத்தியசாலையின் திறப்பு விழா, நேற்று மாலை (19) ...

Read More »

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம்!

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதுடன், 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் முடிவையும் திரும்பப்பெறாவிட்டால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மிகவும் உறுதியுடன் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துவைப்பேன். பாகிஸ்தானில் இருந்து யாராவது ஜிகாத் போராட்டத்துக்காக காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக ...

Read More »

பிரியா நடேஸ் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை வரை தடை!

ஈழ தமிழ் அகதிகள் குடும்பத்தை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நாளைவரை நீடித்துள்ளது. பிரியா நடேஸ் தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்துவதை தடுத்து நீதிமன்றம் விதித்த உத்தரவு இன்றுடன் முடிவடையிருந்த நிலையிலேயே நீதிமன்றம் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளது. தனது முடிவு குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் கால அவகாசம் அவசியம் என்பதால் தடை உத்தரவை நாளை வரை நீடித்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் கடும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

Read More »

சஹ்ரானின் சகாவின் வாக்கு மூலம்!- பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு!

பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு இன்று(18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர். தேசிய அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இவ் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் அம்பாறை ...

Read More »

புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய வடிவமைப்பில் தோன்றும் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தற்காலிகமாக வரையறுக்கும் உத்தரவு பல்வேறு வகையில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்தல் மற்றும் பெயர் குறிப்பிடப்படும் வெளிநாட்டில் இருப்பது மற்றும் உயிரியல் ரீதியில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட துறைகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவான தற்போதுள்ள சட்டத்தில் திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு அல்லது பொருத்தமான புதிய சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்த தயாரிப்பு பிரிவிடம் சமர்ப்பிப்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் கூட்டாக சமர்ப்பித்த ...

Read More »

முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்!

முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை இந்த அரசு பெற்றுத் தர வேண்டும்  என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை  விடுத்துள்ளார்.   சபையின் 17 வது அமர்வு இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே ஆடை சுதந்திரம் என்பது  சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கு சில கசப்பான  சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே  இருக்கின்றன. சட்டமானது சுற்றறிக்கை , வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக காலத்திற்கு காலம் தெளிவு படுத்தப் ...

Read More »

அமைச்சரவையில் இன்று ணில் முன்வைக்கவுள்ள யோசனை!

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் “20”ஆம் திருத்­தத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைக் கோர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று காலையில் அமைச்­ச­ரவை கூடு­கின்­றது. இந்­நி­லையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாது செய்யும் 20ஆம்  திருத்த சட்ட யோசனை  அமைச்­ச­ரவை  அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் பிர­தான கார­ணியை உள்­ள­டக்கி ஏனைய சில விட­யங்­க­ளுடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ...

Read More »

ஆஸி.யில் பறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்!

பறவையிடமிருந்து தப்பிக்க முயல்கையில், வேகமாக துரத்திவந்த பறவை தாக்கியதில், தலையில் காயம்பட்டு 73 வயது சைக்கிள் பயணி ஒருவர் இறந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக் படத்தில் வருவது போன்று பறவை தாக்கி மனிதன் இறந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஊடகங்கள் கூறியுள்ளதாவது: சிட்னிக்கு தெற்கே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வொல்லொங்கொங்கின் வடக்கு புறநகர்ப் பகுதியான வூனோனாவில் இச்சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அங்குள்ள நிக்கல்சன் பூங்காவின் வேலியை ஒட்டியப் பகுதியில் இந்த பயணி ...

Read More »