Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலிய காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

ஆஸ்திரேலிய காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர  காட்டுத்தீ வேகமாக  பரவி வருகிறது. இதனால் எழுந்துள்ள புகையால்  ஆஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.  . காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர்பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து தீவிபத்தால் பலி எண்ணிக்கை 23யை ...

Read More »

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள பூஜித்த, ஹேமசிறி!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை  மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.   கடந்த நீதிமன்ற விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதிவான் இவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 21/4 உயிர்த்த ஞாயிறு  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்காமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

Read More »

ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை என்று அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் அதுகுறித்த அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து கடந்த காலங்களிலேயே ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார்.   அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகின்ற நிலையில் அப் பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 1 லட்சம் பேர் வரை வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தோடு குறித்த காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே தீயை கட்டுக்குள் ...

Read More »

கோத்தாபயவின் ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி!

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்றினை அவர் அறிந்திருப்பதாக எமக்குத் ...

Read More »

அரசமைப்பை திருத்துங்கள்: மல்வத்து பீடம் கோரிக்கை!

நாட்டில் வளர்ச்சிக்காக புதிய அரசமைப்பு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். அரசமைப்பு திருத்த பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தெளிவுபடுத்தபட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மேற்படி அரசமைப்பு திருத்த பணிகளுக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு மிக அவசிய​மானதெனவும் தெரிவித்தார்.

Read More »

அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது!

அரசியல் தீர்வு  தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் அதுத் தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தனியார் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் போட்டியிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டஉடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் ...

Read More »

ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சி !

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு  அவரை கைதுசெய்ய இரவில் சென்ற காவல் துறை அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர். நேற்று  இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர  ஊடகவியலாளருமாகிய   செல்வக்குமார் நிலாந்தன் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் காவல் துறை அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டாரை அச்சுறுத்திய தோடு  ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 ...

Read More »

சிறிலங்கா விமானப் படை Y-12 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியது!

விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொருங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா  விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப் படைப் பேச்சாளர் கெப்டன் கிஹான் செனெவிரட்ன தெரிவித்தார். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் ...

Read More »

ஆஸ்திரியாவில் ஆடம்பர வாழ்க்கை- இந்திய தூதரை திரும்ப அழைத்தது மத்திய அரசு!

ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு செலவு செய்த இந்திய பெண் தூதரை மத்திய அரசு திரும்ப அழைத்தது. ஆஸ்திரியா நாட்டுக்கான இந்திய தூதராக ரேணு பால் பணியாற்றி வந்தார்.1988-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான இவரது பணிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ரேணுபால் மீது அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியது, நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் ரேணுபால் ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு ...

Read More »