Tag Archives: ஆசிரியர்தெரிவு

மெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலை

மெக்ஸிக்கோவின் வடக்கு சோனோரா மாநிலத்தில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஜோர்ஜ் ஆர்மெண்டா என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார். சோனோரா மாநிலத்தில் சியுடாட் ஒப்ரிகானிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சோனோராவின் சட்டமா அதிபர் அலுவலகம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு நகராட்சி காவல்துறை அதிகாரியும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் ஒரு அதிகாரி காயமடைந்தும் உள்ளார். இதேவேளை சோனோரா மாநில ஆளுநர் கிளாடியா பாவ்லோவிச் அரேலானோ, கண்டிக்கத்தக்க தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும் ...

Read More »

சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா

சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டி வந்தார். ஆனால் ஹூவாய் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது. எனினும் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவன பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடைபோட்டது. மேலும் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. ஹூவாய் நிறுவன விவகாரத்தில் ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை விடுவியுங்கள்?

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்துமிகுந்த இடமாக மாறக்கூடும் என்பதால், தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிட்னி தடுப்பு முகாமிலிருந்து வெளியாகிய படங்கள், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கான முடியாத சூழல் நிலவுவதை உணர்த்தியிருக்கின்றன. அம்முகாமில் உள்ள ஒரு நபர், தான் வைக்கப்பட்டுள்ள 120 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சூழல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தடுப்பில் உள்ளவர்கள் உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாக மருத்துவர்களும் மனித ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க தயாராகும் சிறிலங்கா அரசாங்கம்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக காவல் துறை  காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு செல்லும் ஒழுங்கையில் ஆரம்பத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான பாதையில் காவல் துறை  வீதி சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் ...

Read More »

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “மே 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களாகும். தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். பிரிட்டிசார் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் ...

Read More »

மட்டக்களப்பில் வாள்வெட்டில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15.05.2020) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி வேலூர் 4 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்தந பர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து அவர் அந்த அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் ...

Read More »

மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலியா நிறுவனம்

கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக மன்னிப்பு கேட்டதால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டனின் பொருட்கள் மற்றும் வீரர்கள் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் உலகளாவிய பிரத்தியேக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 2018 செப்டம்பர் மாதம் 17-ந்தேதிக்குப் பிறகு சச்சின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இருந்தாலும் சச்சின் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி ராயல்டி மற்றும் ஒப்புதல் கட்டணத்தை ...

Read More »

10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா

வங்காளதேச நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர். மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் ...

Read More »

சிறிலங்கா இராணுவத்தால் சூடப்பட்டவரை பார்வையிட்டார் கஜன்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார் இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 22) என்ற இளைஞள், கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்தார். இதனையடுத்து, குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் தெரிவிக்கையில், “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ...

Read More »

யாழில் சிறிலங்கா இராணுவம் துப்பாக்கிச் சூடு !

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில்  சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை (15.05.2020) ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி ...

Read More »