ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்துமிகுந்த இடமாக மாறக்கூடும் என்பதால், தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிட்னி தடுப்பு முகாமிலிருந்து வெளியாகிய படங்கள், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கான முடியாத சூழல் நிலவுவதை உணர்த்தியிருக்கின்றன. அம்முகாமில் உள்ள ஒரு நபர், தான் வைக்கப்பட்டுள்ள 120 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சூழல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தடுப்பில் உள்ளவர்கள் உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாக மருத்துவர்களும் மனித உரிமை வழக்கறிஞர்களும் கவலைத் தெரிவிக்கின்றனர்.
“பிரிஸ்பேன் தடுப்பு மையத்தில உள்ள ஒரு காவலாளி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மோசமாக பரவினால், அது ஆஸ்திரேலிய சுகாதார அமைப்பிற்கு மேலும் பாரமாகக்கூடும்,” எனக் குறிப்பிட்டுள்ளார் சிட்னி பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் வல்லுநரான பேராசிரியர் டேவிட் ஐசக்.
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு மையங்களில் உள்ள 1400 வெளிநாட்டினரில் 10 சதவீதமானோர் நியூசிலாந்தினர் எனப்படுகின்றது. அதாவது 150 நியூசிலாந்தினர் இவ்வாறான தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal