Tag Archives: ஆசிரியர்தெரிவு

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கான்டிரியன் நகரில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கான்டிரியன் நகரில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பணம், காரை திருடி 900 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுமி-சிறுவர்கள்!

ஆஸ்திரேலியா நாட்டில் மீன் பிடிக்க செல்லும் ஆர்வத்தில் குடும்பத்தாருக்கு தெரியாமல் பணம் மற்றும் காரை திருடிச் சென்ற ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்களை 900 கிலோமீட்டர் தூரத்தில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ஆஸ்திரேலியா நாட்டில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனங்களை ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் கிரேஸ்மேர் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் தங்களது குடும்பத்தாருக்கு தெரியாமல் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் தனது வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்வதாக கடிதம் ...

Read More »

ஐந்து மாதங்களில் புதிய அரசாங்கமொன்று உருவாகும் !

இன்னும் ஐந்து மாதங்களில், புதிய அரசாங்கமொன்று உருவாகும் என்று,  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியா வைத்தியசாலைக்கான புதியக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, இன்று (15) இடம்பெற்றபோது, அக்கட்டடத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

கூட்டமைப்பு அரசுக்கு முண்டு கொடுக்கும் துரோகச் செயலை நிறுத்தவேண்டும்!

“கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “சகல தமிழ் கட்சிகளும் எமது இனத்தின் எதிர்கால இருப்பு பெரும் ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்து தமக்கு இடையிலான காழ்ப்புணர்வுகள் அரசியல் போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு முழுமையான “அரச எதிர்ப்பு” அரசியலை ...

Read More »

மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை காப்பாற்றியுள்ளது!

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை  குறித்து எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியினர் மீது, மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  நிராகரித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் சேமசிங்க இதனைக் கூறியுள்ளார். அத்துடன், 2015ஆம் ஆண்டு பொய்யான விடயங்களை தெரிவித்து நல்லாட்சியை கொண்டுவந்து நாட்டை நாசப்படுத்த ஒன்று சேர்ந்த தரப்பினர் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக ஒன்றிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ...

Read More »

பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும் !

மரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும் என, கூறியுள்ளார். வளவ வலயத்தில் உள்ள மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி  உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இன்று (14) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்!

வங்காளதேசம் நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத்(91) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்தி கிழக்கு பாகிஸ்தானை வங்காளதேசம் என்ற தனிநாடாக இந்தியா மலரச் செய்தது. அங்கு அதிபர் அப்துஸ் சர்தார் தலைமையில் நடைபெற்றுவந்த ஜனநாயக முறையிலான ஆட்சியை 1982-ம் ஆண்டில் ராணுவ புரட்சியின் மூலம் கவிழ்த்த ஹுசைன் முகம்மது எர்ஷாத், அந்நாட்டின் சர்வாதிகாரியாக மாறி, ஜனநாயகத்துக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரில் இன்று காலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Read More »

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக இந்தியரான அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு கடன் அளித்து நிதியுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று வெளியிட்டார். தற்போது ஸ்டேட் பேங்க் ...

Read More »

ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்ற நபரே மகரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »