Tag Archives: ஆசிரியர்தெரிவு

நான் அன்றும் பேசினேன்; இன்றும் பேசுகிறேன்; என்றும் பேசுவேன்!-ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீ டூ பிரச்சாரத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக செய்தி ஊடக நிறுவனங்கள், சினிமாத் துறை, நாடகக் கலைஞர்கள் எனப் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்தும், அதைச் செய்தவர்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராய், "நான் கடந்த காலத்தில் இது குறித்து பேசியிருக்கிறேன். ...

Read More »

கடற்கரையில் கண்டெடுத்த காதல் கடிதம் கண்ணீரால் நனைந்தது!

கடற்கரையில் கண்டெடுத்த காதல் கடிதத்தைப் பற்றிய விடயத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த Daniel McNally மற்றும் அவரது மனைவி Kate Challenger உடன் இணைந்து கடந்த ஓகஸ்டு 7 ஆம் திகதியன்று கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்தது வருவதை அவதானித்த குறித்த காதல்ஜோடி அதனை எடுத்துப் பார்த்த போது உள்ளுக்குள் காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அந்த கடிதத்தில் சீன மொழியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் விசா நடைமுறையில் மாற்றம்: பாதிப்பை எதிர்கொள்வோர் யார்?

அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. புதிதாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரை regional நகரங்கள் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் குறித்து பேசப்பட்டு வருவதாக கடந்த ஓகஸ்ட் மாதம் அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சனத்தொகை மற்றும் நகரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Alan Tudge இதுதொடர்பில் நேற்று (09) உரையாற்றியிருந்தார். கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிவரவாளர்கள் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகர் ஆகிய இடங்களையே அண்டியே வாழ்கின்றனர். ...

Read More »

காஞ்சிரம்குடா படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர். குறித்த படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பொது அகழ் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆத்தம ...

Read More »

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு: ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளத்தை மூட முடிவு!

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு காரணமாக ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘கூகுள்’ தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் ...

Read More »

திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி !

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும்போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, திருடன் காவல் துறை , நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா என்று அழுத்தமான கதையம்சம் உள்ள பல படங்கள் அவருக்கு அமைந்தன. சமீபத்தில் திரைக்கு வந்த 96 படத்தில் காதலில் தோல்வி அடைந்தவராக நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் ...

Read More »

சர்வதேச தலையீடு அவசியம் இல்லை!-ரணில்

சிறிலங்கா படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது எனவும் சிறிலங்கா ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read More »

சேலைக்கு வழங்கப்படுகின்ற பிணை காவிக்கு இல்லை!-சுதந்த தேரர்

நாட்டில் பொட்டு வைத்தவர்களுக்கும், சேலை அணிந்தவர்களுக்கும் தனியாக தொழிற்படுகின்ற சட்டம் காவியுடை அணிந்தவர்களுக்கு வேறொரு வகையில் செயற்படுகின்றது. நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த புலிகள் மீண்டும் வரவேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரிய சேலை அணிந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிணை நாட்டினதும், சிங்கள பௌத்தர்களினதும் உரிமைகளுக்கான குரல்கொடுத்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்படாதது ஏன் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பினார். ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read More »

அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் !

ஊழல் வழக்கில் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவருமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மனைவியின் மரணத்துக்காக பரோலில் வந்தார். பின்னர் அவருக்கு கடந்த மாதம் 19-ந் திகதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. முன்னதாக தனது மனைவியின் உடல் நலக்குறைவு மற்றும் சிறைத்தண்டனை ...

Read More »

ஆபத்தான நிலையில் மேத்யூ ஹேடன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது, மிகப்பெரிய விபத்தில் சிக்கியுள்ளார். அவரின் கழுத்து, தலை, முதுகு தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதுபோல், புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், அலைச்சறுக்கு விளையாட்டில் இருந்து போது, ஹேடன் விபத்தில் சிக்கியுள்ளார். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் தப்பித்தேன் என்று மட்டும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹேடன், குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க குயின்ஸ்லாந்து நகரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இந்த விபத்து நடந்திருக்கலாம் ...

Read More »