Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்ப்பதற்கு சிறையிலுள்ளவர்களின் உறவினர்களுக்கு  ஐந்து நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை கைதிகளை  உறவினர்கள் பார்ப்பதற்கு  ஐந்து நாட்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு புத்தாண்டு தினத்தன்றும் அதற்கு அடுத்தநாள் மாத்திரம் உறவினர் கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நாட்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக சிறைச்சாலை அதிகாரி ஜெனர் ஜயசிறி தெரிவித்துள்ளார். இதன்படி ...

Read More »

கோத்தாவை கையாள்வதற்காக சரத்பொன்சேகாவிற்கு முக்கிய அமைச்சு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களி;ன் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கோத்தபாய ராஜபக்சவின்  பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகாவிற்கு  உள்துறை அமைச்சர் பதவியை வழங்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு   என்பது குறிப்பிடத்தக்கது.   பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து ...

Read More »

நியூசிலாந்து – துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் திகதி பொதுத்தேர்தல்!

ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ...

Read More »

துறைமுக நகருக்குள் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள்!

கொழும்புத் துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதெனத் தெரிவித்துள்ள மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க, நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80 ஆயிரம்  பேருக்கு அந்நகரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளதோடு, துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. அதனை நிர்வகிக்க  கொழும்பு மாநகர சபையல்லாத ஒரு தனி அமைப்பு அமைக்கப்படும். அதற்கான சட்ட மூலங்கள் தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதன்போது மேலும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஊதிய உயர்வு கேட்டு பேரணி !

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஊதிய உயர்வும் வேலையிடப் பாதுகாப்பும் கோரி பேரணி நடத்தியுள்ளனர். அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதால் பேரணி பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊதிய உயர்வு, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர். “விதிகளை மாற்றவும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும் எண்ணிக்கையில் அவர்கள் திரண்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

Read More »

பொதுமக்களிடமிருந்து 2077 பில்லியனை வரி வருமானமாக பெற அரசாங்கம் முயற்சி!

அரசாங்கம் இவ்வருடத்தில் பொதுமக்களிடம் இருந்து 2077 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. இத்தொகையானது கடந்த 2014 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட வரி வருமானத்தை போல் இரண்டு மடங்காகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கு அமைய  அனைத்து அரச ஊழியர்களுக்கும்  விசேட மாதாந்த கொடுப்பனவு  2500 ரூபா வழங்கல், ...

Read More »

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் பெருமளவில் பரவிவருவதாக சந்தேகிக்கப்படும் தட்டம்மை-Measles குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சுகாதாரத்திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தொற்று நோயிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் சுகாதாரணத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இதுவரைக்கும் 84 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நோய் தாக்கம் பிலிப்பீன்ஸ் உட்பட ஏனைய நாடுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் வெளிநாடு சென்று வருகின்ற பயணிகளினால்தான் இந்த நோய் அவுஸ்திரேலியாவுக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டிருக்கிறது. வெளிநாடு செல்கின்ற அவுஸ்திரேலியர்கள் தடுப்பூசியை ...

Read More »

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு!

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என நிலஅளவை திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த காணிகள் 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நாளைய தினம் 11ஆம் திகதி காலை 9 மணி ...

Read More »

பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு ராணி ஒப்புதல்!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் திகதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12-ந் திகதியுடன் முடிகிறது. இது சாத்தியமானால் பிரிட்டனில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ ...

Read More »