கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே நோய் தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிடுமாறும் உலக சுகாதார நிறுவனத்துக்கு 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கடிதம் எழுதி உள்ளனர். உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த கொடிய வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆகும். இது மனிதர்கள் தும்மும்போதும், இருமும்போதும் தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் அடுத்தவருக்கு பரவுவதாக ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது
வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் ஐசிசி கூட்டத்தில் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அகாரிகப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது. இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் டி20 ...
Read More »வெல்லாவெளி கிராமத்தில் விகாரை அமைக்கப்படும் நிலை
மட்டக்களப்பு வெல்லாவெளி கிராமத்தில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார். தொல்பொருள்களுக்கான அடையாளம் காணப்படுவதாக தெரிவித்து வெல்லாவெளியில் விகாரையை அமைப்பதற்கு சில பௌத்த பிக்குகள் முயன்றுவருவதாக தெரிவித்துள்ள அவர் இதனை கருணாவினால் தடுத்து நிறுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையி;ல சில அரசியல்வாதிகளை அம்பாறையில் களமிறக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களால் தமிழர்களுக்கு என்ன நிலை நிகழப்போகின்றது என்பதை எமது முதுநிலை தமிழர்கள் சொல்லியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெல்லாவெளி கிராமம் ...
Read More »கரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்
கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இயக்கச்சியில் முன்கூட்டியே வெடித்த குண்டை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியை சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர் என ஜலன்ட் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை சம்பவத்தினை தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் ...
Read More »வீடு எம்.ஏ.சுமந்திரனால் இன்று இடிக்கப்படுகின்றது
வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும் வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்றுஅணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும்; பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள். கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல் அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு எம்.ஏ.சுமந்திரன் அவர்களாலேயே இன்று இடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ...
Read More »அடைக்கலம் வழங்க அவுஸ்திரேலிய அரசு பரிசீலனை!
சீன அரசின் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். சீன அரசானது ஹொங்கொங்கிற்கெதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இச் சட்டத்தின் மூலம் பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யவும் சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும். இச் சட்டத்தை எதிர்த்து, ஹொங்கொங்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு சீன அரசினுடைய இந் நடவடிக்கைகளுக்கு உலக தலைவர்கள் தொடர்ந்து ...
Read More »நைஜீரியாவில் 4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்
நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். நைஜீரியா லவுராய்கிஜி என்ற பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார். இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் லவுரல் தானாகவே தனது திறமையை கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற ஆச்சரிய தகவலை அவரின் தாய் லவுராய்கிஜி வெளியிட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர் மூலமே குழந்தை கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இது குறித்து லவுராய்கிஜி தனது ...
Read More »சுதந்திரபுரத்தில் அகழ்வு பணி முன்னெடுப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியொன்றில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாளை (07) நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று (04) கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, நிலத்துக்கடியில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
Read More »சிறிலங்காவி்ல் வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு
ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு வெ ளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வழமையாக காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நேரம் நிறைவடையும் நிலையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த நேரமானது 1 மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு நேரத்தை நீட்டிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதென்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More »புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்…….
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம். கடந்த ஏழு தசாப்பதங்களாக இலங்கைத்தீவில் இன அழிப்புக்கு முகம்கொடுத்துவரும் எமது மக்கள் அந்த அழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்கள். குறிப்பாக கடந்த 2009 வரையான மூன்று தசாப்பதங்களாக அதி உச்ச அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்துள்ளதன் மூலம் எமது உரிமைப் போராட்டம் சர்வதேச கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளானது, தமிழ்த் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			