மட்டக்களப்பு வெல்லாவெளி கிராமத்தில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள்களுக்கான அடையாளம் காணப்படுவதாக தெரிவித்து வெல்லாவெளியில் விகாரையை அமைப்பதற்கு சில பௌத்த பிக்குகள் முயன்றுவருவதாக தெரிவித்துள்ள அவர் இதனை கருணாவினால் தடுத்து நிறுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையி;ல சில அரசியல்வாதிகளை அம்பாறையில் களமிறக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களால் தமிழர்களுக்கு என்ன நிலை நிகழப்போகின்றது என்பதை எமது முதுநிலை தமிழர்கள் சொல்லியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெல்லாவெளி கிராமம் தொல்பொருளுக்கான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது முடிந்தால் வீரம் பேசும் பிரதியமைச்சரால் அதனைதடுத்து நிறுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal