Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஏமனில் பசியால் உயிரிழந்த 85,000 குழந்தைகள்!

ஏமனில்  நடக்கும் உள்நாட்டுப் போரில் பசி காரணமாக 85,000 குழந்தைகள் இறந்துள்ளதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏமனில் கடந்த 3 ஆண்டுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பசி காரணமாக இறந்துள்ளனர். மேலும் அங்கு பலர் மோசமான  நெருக்கடிக்களுக்கு ஆளாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 80 லட்சம் பேர் உணவின்றிப் பரிதவிக்கின்றனர் என்று ஐ.நா. சபை ...

Read More »

வவுனியாவில் வாள்வெட்டு! இருவர் வைத்தியசாலையில், மூவர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.   தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது 20) , ராஜரட்ணம் (வயது 20) ஆகிய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் ...

Read More »

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை!

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “சமகாலத்தில் உள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேரம் பேசக் கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. எவரை ஆதரித்தால் தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா? ...

Read More »

என் பிள்ளைகளுக்கு ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று கூடத்தெரியாது!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எனது மகன்மார் இருவரும் அப்பாவிகள் என்றும் அவர்கள் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டது எனக் கூறுவது சுத்தப் பொய் என்று கைதான சகோதரர்களின் தந்தை கூறியுள்ளார். மெல்போர்னில் பொதுமக்கள் பரவலாக உள்ள இடத்தில் துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் இன்று (20) அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...

Read More »

எதை பாதுகாக்க சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்? லசந்தவின் மகள் மைத்திரிக்கு கடிதம்

முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார். லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள்,உங்கள் முப்படைகளின் பிரதானியை ...

Read More »

கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை – டிரம்ப்

பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றி வந்ததால், இந்த விவகாரத்தை அமெரிக்கா கடுமையாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது. கசோக்கி கொலை சம்பவம் அடங்கிய ஆடியோ டேப்பை துருக்கி அரசு கைப்பற்றியது. இதை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்து ...

Read More »

பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள  காவல் துறை கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின்  வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே   காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள   காவல் துறை  இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 17000 தொலைபேசி அழைப்புகளையும் ...

Read More »

திரைமறைவில் என்ன நடக்கிறது?-கெஹெலிய ரம்புக்வெல்ல

நாடாளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய நாடாளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது அனைப் பார்த்துக்கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் ...

Read More »

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டு ...

Read More »

பாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன?

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார். பாகிஸ்தானில் நிம்மதியாக, ...

Read More »