மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும். இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மீனவருடன் 10 வருடமாக நட்புக்கொண்டுள்ள கொக்கு !
வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார். அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது. நான் இக்குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து வருகின்றேன். கடந்த பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது. குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து ...
Read More »ஞானசார தேரர் வரலாற்று அறிவின்றி கருத்து வெளியிடுவதை நிறுத்தவேண்டும்!
பொதுபலசேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் சரியான வரலாற்று அறிவில்லாது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரவித்துள்ளார். அத்தோடு வடகிழக்கு தாயகப் பரப்பில் இராணுவம் நிலைகெண்டிருப்பதை எப்போதும் தாம் ஏற்றுககொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். வட,கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல இலங்கை முழுவதும் பௌத்த பூமியாகும். வடகிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை ஞானசாரதேரர் தெரிவித்திருந்தார். ஞானசார தேரரின் குறித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ரவிகரனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...
Read More »ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்
கொரோனா வைரசை கட்டுப்படுத்தியுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம் என டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 ...
Read More »புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்!
கொரோனா வைரஸ் இயற்கையில் இருந்து வேறானதொன்றல்ல. அதுவும் இயற்கையில் ஒரு படைப்பே. அதன் மூலம் இன்று இயற்கை ஊதியிருக்கும் அபாயச்சங்கு மனுக்குலத்துக்கான ஒர் எச்சரிக்கை. இதனைப் புரிந்து கொண்டவர்களாகக் கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போமாயின் ஏனைய உயிர்களைப் போன்று இப்புவியில் மனிதன் நோய் நொடியின்றி நீடூழிவாழலாம் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. ...
Read More »சமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள்
பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தற்போது இருக்கும் ஒரே வழிமுறை சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிவதுதான் என மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு ...
Read More »பாலைவன மண்ணில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி
சார்ஜாவில் பாலைவன மண்ணில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி செய்யப்பட்டதை மந்திரி டாக்டர் தானி அல் ஜையூதி நேரில் ஆய்வு செய்தார். அமீரகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாலைவன மண்ணின் தன்மை மாற்றப்பட்டு, உப்பு நீர் சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு இயற்கையான சவால்களை முறியடிக்கும் வகையில் சார்ஜாவில் தென்கொரிய தொழில்நுட்பத்துடன் நெல் சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அமீரக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் தென்கொரியாவின் வேளாண்மை நிபுணர்கள் கூட்டு முயற்சியில் இந்த ...
Read More »பேராசிரியர் ஜீவன் ஹூல் தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து விலகவேண்டும்!
தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்ஆணைக்குழுவிலிருந்து விலகவேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் திகதிக்கு எதிராக நீதிமன்றம் செயற்படவேண்டும் என மறைமுகமாக பேராசிரியர்ரத்னஜீவன் ஹூல் தூண்டியதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழுவில் அவரின் பொறுப்பு என்னவென வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள் தேர்தல் ஆணைக்குழு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ...
Read More »நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் ஏன் ஏற்பட்டது?
மத்திய வங்கி மோசடியின் முக்கியசந்தேகநபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதுடன் சிங்கப்பூரில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய நிதிமோசடியான மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்தும் நிலையில் இன்டபோல் காணப்பட்டவேளை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து மிகுந்த செல்வாக்கு மிக்க சிலர் மகேந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல்ரீதியிலானவை,அவரை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்தவேண்டிய அவசியமில்லை என இன்டர்போலிற்கு அறிவித்தனர் எனவும் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார் இந்த விபரங்களை ...
Read More »நாளையும், நாளை மறுதினமும் முழு நேர ஊரடங்கு!
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஜுன் 6 சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். கடந்த திங்கட்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை அனைத்து ...
Read More »
Eelamurasu Australia Online News Portal