தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்ஆணைக்குழுவிலிருந்து விலகவேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் திகதிக்கு எதிராக நீதிமன்றம் செயற்படவேண்டும் என மறைமுகமாக பேராசிரியர்ரத்னஜீவன் ஹூல் தூண்டியதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழுவில் அவரின் பொறுப்பு என்னவென வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்கள் தேர்தல் ஆணைக்குழு மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை புறக்கணித்து பேராசிரியர் வேறு நிலைப்பாட்டை எடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்கின்றார் என வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தின் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் கொரோனா வைரசினை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடிந்தால் தேர்தலை நடத்த முடியும் என கருதினார்கள் என குறிப்பிட்டுள்ள வாசுதேவ நாணயக்கார ஆழமாக பிளவுபட்டுள்ள வங்குரோத்து நிலையில் உள்ள எதிர்கட்சிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்றம் இல்லாமல் நாட்டை ஆள நினைக்கின்றார் எனவும் குற்றம்சாட்டின என தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal