Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஈரான் மீதான தாக்குதல் ரத்து!

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஈரானில் அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் அவர் உடனடியாக தனது உத்தரவை திரும்ப ...

Read More »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் மாதர் முன்னணி, வாலிப முன்னணி ஆகிய மாநாடுகளும், இரண்டாவது நாள் பேராளர் மாநாடும் நடைபெறவுள்ளன. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணித் தலைவர் திருமதி மதினி நெல்சன் தலைமையில் மாதர் முன்னணி மாநாடு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதே மன்றத்தில் மாலை 5 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலில் போடியிடுவதா இல்லையா ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போடியிடுவதா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்திலேயே உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கும் ஊடக பிரதானிகளுக்குமான விசேட சந்திப்பொன்று சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் சிறிலங்கா  ஜனாதிபதி மேலும் தெரிவித்த சில விடயங்களாவன : * நாட்டின் ஸ்திரத் தன்மையின்மைக்கு 19 ஆவது அரசியல் திருத்தமே காரணமாகும். ஆகவே அடுத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் அதனை நீக்க ...

Read More »

ஈரானின் ஆன்மீகதலைவரிற்கு எதிராக தடை

ஈரானின் ஆன்மீகதலைவர்  ஆயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களிற்கு  எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளார். புதிய தடைகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.  புதிய தடைகள் காரணமாக பில்லியன் டொலாகள் பெறுமதியான ஈரானின் சொத்துக்கள் முடக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்கான பதில் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த தடை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஈரான் கடைப்பிடிக்கும் மோதல் போக்கிற்கு இறுதியில்  கமேனியே காரணம் என ...

Read More »

நானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்டியிடத்தயார்!

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்பதாக, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளி­யிட்­டுள்ள அவர்,“பிர­ப­ல­மான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்­டி­யி­டு­மாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்து எனக்கு வேட்­பு­ம­னுவை வழங்­கினால், ஜனாதி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்கிறேன். எனக்கு போட்­டி­யிடும் வாய்ப்பு வழங்­கப்­பட்டால், ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­படி வெற்றி பெறு­வது என்று, எனக்குத் தெரியும். இரண்டு தரப்­பு­களில் இருந்தும் என்னால் வாக்­கு­களைப் பெற முடியும். கடற்­றொழில் அமைச்­சையும், ...

Read More »

கூட்டமைப்பின் வழமையான கையாலாகாத தன்மை!

கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். மிகவும் இலகுவான முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டிய கல்முனைப் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயம், இன்று இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து இனங்களுக்கிடையேயான முறுகலை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதற்கான முழுப் பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; கடந்த மாகாண சபையில் பதினொரு உறுப்பினர்களைக் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இருந்து தாயகம் நோக்கி சிறகடித்த சிட்டுக்குருவி !

அவுஸ்திரேலிய தம்பதி ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்பட்ட நிலானி எனும் பெண், பல வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார். 34 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாயை தேடி இலங்கை வந்த மகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை நோக்கி சென்ற மகளே தற்போது இலங்கையில் தாயை தேடி வந்துள்ளார். வறுமையின் காரணமாக குழந்தை பிறந்த இரண்டு வாரத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுத்ததாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கு ...

Read More »

தனியார் ஊடகங்களை வெளியேற்றிய வடக்கு ஆளுநர்!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார். இது அரச ...

Read More »

சஹ்­ரா­னுடன் எவ்­வித ஒப்­பந்­தங்­க­ளையும் செய்ய­வில்லை!-ரோஹித்த அபே ­கு­ண­வர்­தன

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எவ்­வித ஒப்­பந்­தங்­க­ளையும் செய்ய­வில்லை என காங்­கி­ரஸின் காத்­தான்­குடி பிர­தான அமைப்­பாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், தற்­கொலைக் குண்­டு­தாரி சஹ்­ரா­னுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒப்­பந்தம் செய்­த­தாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­மளித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்­ள­தாக பொது­ஜன பெர­முன கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித்த அபே­கு­ண­வர்­தன ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார். மேற்­படி எந்த ஒப்­பந்­தத்­தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் செய்­தது என்­பதை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தா­கவும் அதனை மறுப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். கடந்த 2015 நாடா­ளு­மன்றத் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அகதிபெண்களுக்கு தொடர்ந்து இறந்து பிறக்கும் குழந்தைகள்!

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மற்றும் அகதிப்பின்னணி கொண்ட பெண்களுக்கு கருக்கலைவு மற்றும் குழந்தைகள் இறந்து பிறப்பது அதிகரித்துள்ளது. இதற்கு அவர்களிடையே காணப்படுகின்ற மொழிப்பிரச்சினைதான் பிரதானமானது என்று Medical Journal of Australia தெரிவித்துள்ளது. மேலும் அகதிப் பின்னணிகொண்ட பெண்களின் வாழ்க்கை சித்திரவதை மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாக இருக்கும்போது கர்ப்பகாலம் மிகக்கடினமானதாக காணப்படும். இதுவும் இன்னொரு பொதுவான பிரச்சினையாகியுள்ளது என்று Medical Journal of Australia சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பெண்களுக்கு ...

Read More »