Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரசினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிவிப்பு!

கொரோனோவைரசினை பிரதிபலிக்கும் வைரசினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். முக்கியமான இந்த முயற்சி காரணமாக கொரோனோவைரசிற்கான தடுப்புமருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் துரிதமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரஸ்களை உருவாக்கியுள்ளனர் தொற்று நோய்க்கு உள்ளான நபர் ஒருவர் மூலம் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் குறித்த சரியான தகவலை பெற்றுக்கொள்ள உதவும் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரசினை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது!

சீனா எங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் பரவலாக உள்ள நிலையில், அப்பதற்றம் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல் பகுதியினூடாக 6 சீனர்கள் நுழைய முயன்ற சம்பவம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த ஆறு சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் ...

Read More »

கரோனா வைரஸை எதிர்கொள்ள எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா

கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் சீனாவிடம் உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் ...

Read More »

கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல்!

சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று போட்டுவிட்டு செய்யமுடியாத ஒன்றை செய்வோம் என்று கூறுவது எங்கள் மக்களுக்கு நியாயமானது அல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியளார் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கால அவகாசம் எங்களுக்கு எவரும் கொடுத்தது கிடையாது ஊடகங்களுக்கும் மூன்று நான்கு வருடங்களாக விளங்கப்படுத்தியும் அதனை விளங்கமாட்டோம் என்று தலைகீழாக நிற்கின்றார்கள். ...

Read More »

வீசா வழங்குவது இடைநிறுத்தம்!

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

Read More »

சிறிலங்காவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Read More »

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போது மூச்சு திணறி பெண் உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட பெண் மூச்சு திணறி உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கேக்குளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது. அதனை ...

Read More »

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர் உள்பட ...

Read More »

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை ...

Read More »

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் கொண்ட விமானமான ‘போயிங் 777 எக்ஸ்’ விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானம் ‘போயிங் 777 எக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது. அந்த நகரில் உள்ள பெயின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ...

Read More »