கரோனா வைரஸை எதிர்கொள்ள எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா

கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் சீனாவிடம் உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கபட்டுள்ளனர் என சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக நடந்த கூட்டத்தில் சின வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாங் யீ கூறும்போது, “ கரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து வளங்களும் சீனாவிடம் உள்ளp”என்றார்.

கரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு சீனாவில் பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.