Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனாவுக்கு தீர்வு அமெரிக்க பரிசோதனை தடுப்பூசி?

முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது, மிகப் பெருமளவில் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது. வொஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஓர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி இணையத்தளம் தகவல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணியான ...

Read More »

170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர்!

இத்தாலி தென்கொரியாவிலிருந்து சிறிலங்கா  வந்த 170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஈரான் தென்கொரியா ஆகியநாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 16 ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் சிறிலங்கா  வந்த அனைவரையும் அருகில் உள்ள காவல் துறை நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோன வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். இத்தாலி கொரியாவிலிருந்து நாடு ...

Read More »

‘கொரோனா’ சந்தேகம்: யாழில் பலர் விடுவிப்பு!

கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைகளின் பின்னர், இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்தே, விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஏனைய வைத்திசாலைகளிலும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கை ரீதியில் 12 மத்திய நிலையங்கள்!

இலங்கை வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம்கூறியுள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More »

உலகை உலுக்கிய குழந்தை மரணம் – 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்த விபத்தில் உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தி மரணம் தொடர்பாக 3 பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பல நேரங்களில் இந்த ஆபத்தான பயணங்கள் விபத்தில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ...

Read More »

கிளிநொச்சியில் வெடி பொருள் வெடிப்பு! -இளைஞர் கைது!

கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன் கட்டு குடியிருப்பு பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு (14-03-2020) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  காவல் துறையினர்  தெரிவித்தனர் கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில்  ஈடுப்பட்டு வருகின்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெடிப்பு சம்பவம்& இடம்பெற்றதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ; இராணுவத்தினர், கிளிநொச்சி காவல் ...

Read More »

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரை சந்தித்த இவன்கா டிரம்பின் நிலை……?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதில்லை எனவும் எனினும் வீட்டிலிருந்து பணிபுரிவார் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இறுதியாக இவன்கா டிரம்பினையும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரையும் சில நாட்களிற்கு முன்னர் சந்தித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீட்டர் டட்டன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை எனினும் பீட்டர் டட்டன் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தவேளை அவரிற்கு நோய் அறிகுறிகள் ...

Read More »

ஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் !

அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார். அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 1,500 பேருக்குப் பரவியது!

ஸ்பெயினில் ஒரேநாளில் 1500 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உருவான கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இதுவரை உலகெங்கிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கிடையே ஒரே இரவில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஸ்பெயினில் இதுவரை 136 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் ...

Read More »

சிறிலங்கா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு சவுதி தடை!

சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளுக்கு சிறிலங்கா  உள்ளிட்ட 12  நாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சவுதி அரேபியாவின் தற்காலிக பயண தடை  பட்டியலில் உள்ள நாடுகள் மெனா பிராந்தியம் 1. பஹ்ரைன் 2. எகிப்து 3. ஈராக் 4. குவைத் 5. லெபனான் 6. ஓமான் சிரியா 7. துருக்கி 8. ஐக்கிய அரபு அமீரகம் ...

Read More »