அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதில்லை எனவும் எனினும் வீட்டிலிருந்து பணிபுரிவார் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இறுதியாக இவன்கா டிரம்பினையும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரையும் சில நாட்களிற்கு முன்னர் சந்தித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பீட்டர் டட்டன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை எனினும் பீட்டர் டட்டன் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தவேளை அவரிற்கு நோய் அறிகுறிகள் இல்லாததன் காரணமாக சிரேஸ்ட அதிகாரிகள் எவரும் தங்களை தனிமைப்படுத்தவேண்டிய அவசியமில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் மகளும் சிரேஸ்ட ஆலோசகருமான இவன்கா டிரம்ப் வெள்ளி;க்கிழமை வீட்டிலிருந்தே பணிபுரிந்தார் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை கடுமையான முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் இதனை செய்தார் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்வரை அவர் இதனை பின்தொடர்வார் எனவும் தெரிவித்துள்ளது.
இவன்கா நோய் அறிகுறிகள் எதனையும் வெளிப்படுத்தவில்லை அவர் தன்னைதானே தனிமைப்படுத்த மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பீட்டர் டட்டன் அமெரிக்க சட்டமா அதிபரையும் சந்தித்துள்ளார். சட்டமா அதிபர் வீட்டிலிருந்து பணிபுரிவார் ஆனால் அவரிற்கு நோய் அறிகுறிகள் இல்லை என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார் .
Eelamurasu Australia Online News Portal