Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் எங்கே?

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 165 பேர், சிறிலங்கா  விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், பங்களாதேஷூக்கு அனுப்பி வைப்பதற்காக, நேற்று (08) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா-மெல்பன் நகரிலிருந்து யு.எல் 605 என்ற விமானமே  கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது. அவுஸ்திரேலியா- மெல்பன் நகரிலிருந்து பங்களாதேஷ் டாக்கா நகருக்கு சர்வதேச விமான போக்குவரத்து மார்க்கம் இல்லாததால், இந்த பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு அழைத்துவரப்பட்டு இங்கிருந்து பங்களாதேஷ் நோக்கி சிறிலங்கா விமான சேவைக்குரிய விசேட  விமானம் ...

Read More »

கொழும்பில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறக்கும் விமானம்!

அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வானுர்தி இன்றைய தினம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது.  இதற்கமைய கற்றல் செயற்பாடுகளுக்காக சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனனர். இதேவேளை, அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் அடங்கிய சீனாவின் மூன்றாவது வானுர்தி இன்று நாட்டை வந்தடையவுள்ளது. கொழும்பிலுள்ள சீனா தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. 30 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டமைப்புக்கள், 15 ஆயிரம் பிரத்தியேக பாதுகாப்பு ஆடைகள், ...

Read More »

சம்பந்தர் விக்கினேஸ்வரனிடம் ஏமாந்துவிட்டார் ! -அருந்தவபாலன்

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தர் விக்கினேஸ்வரனிடம் ஏமாந்துவிட்டார் என அண்மையில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த போதே தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ்மக்களை ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா?

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் திகதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா காலம் நிறைவடையும் முன்னர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத் தேர்வின் முடிவுகளை விசா விண்ணப்பத்துடன் ‘அபிமன்யூ’ சமர்பிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள இச்சூழலில், PTE (Pearson ...

Read More »

சிறிலங்கா இராணுவம் பலி!

மின்னேரியா காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை – ஹபரணை வீதியில் உள்ள கிரித்தலை பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பத்து பேர் பயணித்த இராணுவ வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது 8 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ...

Read More »

அநாதரவான பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக மாற்ற திட்டம்!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும்,ப யங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களை கொலை செய்ய ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை!

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் ...

Read More »

தற்போதைய அரசாங்கம் பக்கச் சார்பாக செயற்பட்டு வருகிறது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் அரசாங்கம் அதன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. அதற்கான நிவாரணமும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே மக்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களைக் கைவிட வேண்டாம் என்றும் அந்த கட்சி கோரிக்கை விடுத்தது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read More »

முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இவ்வருடம் எளிமையான முறையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ஏற்பாட்டுக்குழு நேற்று(05) விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வருமாறு, முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18.05.2020 அன்று நடைபெறும். கொவிட் 19 பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள், சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி ...

Read More »

வைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா

வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நோய் ...

Read More »