மின்னேரியா காவல் துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் உள்ள கிரித்தலை பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பத்து பேர் பயணித்த இராணுவ வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது 8 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை உள்ள கிரித்தலை இராணுவ முகாமில் இணைக்கப்பட்ட 31 வயதுடையவர் என்பதுடன் அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal