அதிக வாசிப்பு

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற குடும்ப தகராறின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி Carlingford பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சிறுவன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்படுவதை அவனது பாட்டி தடுக்க முற்பட்டுள்ளார். இருப்பினும் எவ்வித பயனும் இன்றி படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது ...

Read More »

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை!

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவருக்கே நீதிமன்றம் நேற்று (07.06.2018) இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதில் 9 ஆண்டுகள் அவர் கட்டாயம் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் குறித்த இலங்கையர் சென்றிருந்தார். அப்போது தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் ...

Read More »

மூன்று ‘உ’க்களைக் கடைப்பிடித்தால் 100 வருடம் குறையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம்!

டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்… “ `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ...

Read More »

ஆனந்த சுதாகரனின் மனைவியை கொன்றது அரச பயங்கரவாதமே!

பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ...

Read More »

சிறிலங்காவிற்கு பெருமளவான முதலீடுகளை வழங்கியுள்ள சீனா!

சீனாவின் ‘கடன்வலை ராஜதந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் முதலீட்டு வேலைத்திட்டங்களை மையப்படுத்தி, அமெரிக்காவின் சட்டவாக்குனர்கள் சிறிலங்கா விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான பெருமளவான முதலீடுகளை சீனா வழங்கியுள்ளது. எனினும் இதன் மூலம் சிறிலங்காவின் தமது கடன்பொறியில் சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை சீனா கையாள்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின்  களநிலவரங்களை ஆய்வு நோக்கில் அமெரிக்காவின் அதிகாரமிக்க சட்டவாக்குனர்கள் குழு ஒன்று சிறிலங்கா வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து ...

Read More »