கொட்டுமுரசு

விக்கி – மகிந்த – வாங்ஜி

கடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்தவாரம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் சென்னைக்கு  பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச  வெளியிட்டுள்ள கருத்துக்களும்  இவை. இரண்டுக்கும் மத்தியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட  சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி   தெரிவித்துள்ள கருத்துக்களும் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தெளிவுற எடுத்துக்காட்ட  வல்லவைகளாய்க்  காணப்படுகின்றன. “”இலங்கையில் எந்த ...

Read More »

கீழடி என்பதே எங்கும் பேச்சு!

தேனீக்களின் இயல்பு தேனைச் சேகரிப்பதுதான். ஆனால், சேகரிக்கப்பட்ட தேனின் பயனாளிகள் தேனீக்கள் இல்லை என்றாலும், தொடர்ந்து தேனீக்கள் தேனைச் சேகரித்துக்கொண்டே இருக்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் தேனீக்களைப் போன்றவர்கள். கல்வெட்டு, சிற்பம், அகழாய்வு, சுவடியியல், நாணயவியல், அருங்காட்சியகவியல் போன்றவை தொல்லியல் எழுத்துலகத்தின் பிரிவுகள். வரலாற்று மன்றங்கள், தொல்லியல் கழகங்கள், மரபுநடைக் குழுக்கள் எனப் பல அமைப்புகள் ஓசையின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ எனும் நூலைத் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை தொல்லியல் ...

Read More »

ரஜனி கோத்தாரி: இந்திய அரசியலின் குறுக்குவெட்டு ஆய்வாளர்

அரசியலோடு நெருங்கிப் பிணைந்தது பொருளியல். உலகளவில் பொருளியல் கொள்கைகளே அரசியலின் அடிப்படையாகவும் இருக்கின்றன. ஒருசில இனக்குழுக்களை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகளில் பொருளியல் வாதங்களே அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கலாம். ஆனால், பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அரசியலைத் தீர்மானிப்பதில் பொருளியலைக் காட்டிலும் சமூகவியலே முக்கியப் பங்காற்றுகிறது. அதை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தியவர் ரஜனி கோத்தாரி. அரசியல்-சமூகவியல் என்ற புதியதொரு ஆய்வுத் துறையைத் தொடங்கிவைத்தவர் அவரே. இந்திய அரசியலைப் பற்றிய விவாதங்களில் ரஜனி கோத்தாரி அளவுக்குத் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் வேறு ...

Read More »

அறிவுக்காக வாழ்பவர்களை நான் நேசிக்கிறேன்!

புத்தகங்கள் என் கனவு என்பதைவிட விட புத்தகங்கள் உருவாக்கும் பிரம்மாண்டமான கனவுக்குள் நான் நடமாடுகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். பிறந்து வளரும் குடும்பச் சூழல், பாலின பேதங்கள் உருவாக்கும் தடைகள் அனைத்தையும் கடந்து செல்ல இந்தக் காகிதக் கதவுகளைத் திறந்தபோதுதான் வழி கிடைத்தது. என் வாழ்க்கையில் நான் முதலும் கடைசியுமாக செய்த திருட்டு மூன்றாம் வகுப்புப் படிக்கையில் பள்ளி நூலகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுவந்ததுதான். அப்போது அது தவறு என்றுகூடத் தெரியாது. அது தெரியவந்து வகுப்பறையில் வைத்து ஆசிரியைக் கண்டித்தபோது இளம் மனதில் பெரும் ...

Read More »

குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாருமில்லை!

குழந்தைகளின் உலகம் குதூகலத்தை, கொண்டாட்டத்தை, உற்சாகத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரதிபலிக்கக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுடைய உலகுக்குள் நவீன விஞ்ஞானம் நுழைந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டது. பயணத்தின்போது ஒரே ஒரு செல்பேசிதான் இருக்கிறது என்றால், குழந்தைகள் ஒரே இருக்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளுக்கொரு செல்பேசிகள் இருந்தால் தனித்தனி உலகுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். முன்பு, கதைகளாலும் விளையாட்டுகளாலும் இணைந்திருந்த குழந்தைகளின் உலகம், இப்போது செல்பேசிகளால் நிலைகுலைந்திருக்கிறது. வீடுகளில் இப்போது குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆட்கள் யாருமில்லை. கதை சொல்லும் நபர்கள் தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். கதை கேட்கும் சூழல் இப்போது கதை பார்க்கும் ...

Read More »

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்!

மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் அதிகாரிகளைத் ...

Read More »

விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டன தகவலை வழங்கியது யார்?

ஜனவரி 8 ம் திகதி ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொள்வதற்கு எட்டு மணித்தியாலத்திற்கு முன்னரே தமக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தாங்கள் படையினரையும் இராணுவ தளபாடங்களையும் பாதுகாப்பான பதுங்கு குழிகளிற்குள் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்கியதாகவும் ; தாக்கப்பட்ட தளங்களை சேர்ந்த இரு ஈராக்கிய படையினர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் தாக்குதல் இடம்பெற்றவேளை வெளியே எந்த போர்விமானமோ அல்லது ஹெலிக்கொப்டரோ இருக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அமெரிக்க படையினருக்கு என்ன நேரத்தில் தாக்குதல் நடக்கும் என்பது கூட தெரிந்திருந்தது என ...

Read More »

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது… அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை ...

Read More »

‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார். அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன. இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல செய்திகளைத் தன்னகத்தே ...

Read More »

ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?

சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது. ஆக, இப்போது உலகம் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபட்டு சுருங்கியுள்ள நிலையில், பெரும்பாலும் குறிப்பிட்ட விடயங்களின் தாக்கங்கள் உலகம் முழுவதும் உணரப்படுபவையாக மாறியுள்ளன. அந்தவகையில், இவ்வாறான குறிப்பிட்ட விடயங்களால் குறிப்பிட்ட தரப்புகளுக்கு கிடைக்கும் அனுகூலங்களே குறித்த விடயங்களுக்கு பின்னால் சதிக் கோட்பாடுகளை கிளப்பி விடுகின்றன. ...

Read More »