Home / செய்திமுரசு / கொட்டுமுரசு (page 3)

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்!

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும்,  போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து  சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, ...

Read More »

வக்சினே சரணம் ?

“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் ...

Read More »

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி ஆதில்

நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல் துறையால்   சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர் ...

Read More »

ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் ...

Read More »

வடக்கில் நேற்று 126 பேருக்கு கொவிட் தொற்று

புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 438 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 65 பேர், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 4 பேர், மல்லாவி ஆதார மருத்துவ மனையில் 3 பேர், ...

Read More »

இழப்பிலிருந்து மீள்தல்

கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள்  தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள்.  இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற ...

Read More »

மாண்டவர்கள் மீண்டெழுதல்

1930 களில் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட உப்பு வரிக்கு எதிராக இந்தியாவில்மகாத்மா காந்தி ஆரம்பித்த உப்பு சத்தியாக் கிரகபோராட்டம் எனப்படும் சிவில் ஒத்துழையாமை இயக்கம் போன்ற இலட்ச க்கணக்கான மக்கள் ஈடுபடுகின்ற குறிப்பிடத்தக்க மக்கள் இயக்கங்களால் மட்டுமே இலங்கையை மாற்ற முடியும். கொழும்பு பேராயர் கர்தினால்ம ல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு துயரத்திற்கு நீதி வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 21 ஆம் திகதி கறு ப்புக் கொடி ஏற் றுமாறு ...

Read More »

தாலிபான் எப்படி உருவாகிறது?

அமெரிக்கா இருபதாண்டுக் காலம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்தி “மக்களாட்சியை வளர்த்தெடுக்க” பெரும் முயற்சி செய்த பிறகு, நிரந்தரமாக அந்த நாட்டில் தங்கள் படைகள் தங்குவது வியாபாரத்துக்குக் கட்டுப்படியாகாது என்ற நிதர்சன உண்மையால் படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தது. உடனே எந்த தாலிபானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஆப்கானிஸ்தானை மீட்க அமெரிக்கா இருபதாண்டுகளுக்கு முன் படையெடுத்ததோ, அதே தாலிபான் “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று உடனே ...

Read More »

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா?

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ...

Read More »

போரும் வைரசும் ஒன்றல்ல

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று. உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு ...

Read More »