எங்களை சுடத் துவங்கினார்கள்…

நாகலாந்தில் ராணுவ வீரர்களின் தாக்குதலில் உயிர் பிழைத்த நபர்களை நேரில் சந்தித்து பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் நாகலாந்தில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் தங்கள் அனுபவத்தினை இந்தியன் எக்ஸ்பிரசிற்கு பகிர்ந்துகொண்டுள்ளனர்.
 நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் அது… அவர்கள் எங்களை அங்கேயே தாக்கினார்கள் என்று 23 வயது ஷெய்வாங்க் கூறினார். நாகலாந்து மாநிலம் ஓட்டிங் கிராமத்தில் சனிக்கிழமை சுரங்கத் தொழிலாளிகள் 8 பேர் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த இரண்டு நபர்களில் ஒருவர் ஷெய்வாங்க். முன்னங்கை மற்றும் மார்புப் பகுதியில் துப்பாகிச்சூட்டால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திங்கள் கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளிகள் வந்த வாகனத்தை நிறுத்த சமிக்ஞை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தப்பித்துச் செல்ல முயன்ற போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது என்று கூறினார். ஆனால் ஷெய்வாங் இது குறித்து கூறிய போது, நாங்கள் வந்த வாகனத்தை நிறுத்தக் கூறி சிக்னல் எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் நேரடியாக எங்களை சுட்டுக் கொண்டனர். நாங்கள் தப்பித்து ஓட முயலவில்லை. நாங்கள் வாகனத்தில் தான் அமர்ந்திருந்தோம் என்று கூறினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் மேலும் 8 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். சில பாதுகாப்புப் படை வீரர்கள் காயம் அடைந்தனர். கோபம் மற்றும் கவலைக்கு மத்தியில் உயிரிழந்த 13 நபர்களின் உடல்களும் செவ்வாய்க்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது.
Yeihwang at the Assam Medical College and Hospital in Dibrugarh Tuesday. (Express photo by Tora Agarwala)
சனிக்கிழமை வேலை முடிந்த பிறகு 8 நபர்களும் பிக்-அப் ட்ரெக்கில் தங்களின் கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம் என்று சனிக்கிழமை மாலை நடைபெற்றதை நினைவு கூறினார் ஷெய்வாங். நாங்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வழியில் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மாலை நேரம், வானம் இருட்டவும் கூட இல்லை. எவ்வளவு நேரம் இது நடைபெற்றது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் சிறிது நேரம் அவை நீடித்தன. வெடிகுண்டுகள் வெடிப்பது போன்று அது இருந்தது என்றார் அவர்.
துப்பாக்கிச்சூடு துவங்கியவுடன் நாங்கள் அனைவரும் வாகனத்தின் தரையில் படுத்துக் கொண்டோம். துப்பாக்கிச்சூடு முடிந்தவுடன் நான் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டேன். ஆனால் என் சகோதரனுடன் சேர்த்து மற்றவர்கள் அனைவரும் இறந்திருக்க கூடும் என்பது எனக்கு உறுதியானது என்றும் ஷெய்வாங் கூறினார். நீங்கள் ஏதேனும் எடுத்துச் சென்றீர்களா என்று கேள்வி எழுப்பிய போது எங்களிடம் ஏதும் இல்லை என்று பதில் கூறினார் அவர்.
நான் சுரங்கத்தில் ஒரு வாரம் வேலை பார்த்தேன். சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் நாங்கள் வீட்டிற்கு திரும்பினோம். ஓட்டிங் கிராமத்தில் இருந்து 6 கி.மீ-க்கு அப்பால் திரு சமவெளியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது. எங்களின் கிராமத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மற்றொன்று குறுக்குவழி. நாங்கள் குறுக்குவழியில் வந்தோம் என்றும் அவர் கூறினார்.
அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ப்ரசாந்தா திஹிங்கியாவிடம் இது குறித்து பேசிய போது, “அறுவை சிகிச்சை, நரம்பியல் துறை மற்றும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைப் பிரிவினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார். யெய்வாங்கிற்கு தலை மற்றும் கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஷெய்வாங்கிற்கு மார்பு மற்றும் முன்னங்கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை நள்ளிரவில் மருத்துவமனை முன்பு அவர்கள் கொண்டு வந்து விடப்பட்டனர். சொனாரி சிவில் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு அவர்கள் இங்கே மாற்றப்பட்டனர். அவர்கள் இங்கே வந்த போது அவர்கள் யார், அவர்களுக்கு எவ்வாறு இப்படி காயம் ஏற்பட்டது என்பது ஏதும் தெரியாது. ஆனால் நாங்கள் உடனே சிகிச்சை அளிக்க துவங்கினோம் என்று அவர் கூறினார்.
மோன் மாவட்ட நிர்வாகம் மற்றும் மோன் காவல்துறையினர் அவர்களை சந்தித்ததோடு மட்டுமின்றி அசாம் காவல்படையினர் இருவருக்கும் பாதுகாப்பு அளித்தனர் என்று ப்ரசாந்தா கூறினார். செவ்வாய்க்கிழமை மாலை நாகலாந்து காவல்துறை குழு ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது என்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஷெய்வாங்கின் உறவினர் நெய்ம்கா உதவிக்காக மருத்துவனையில் உள்ளார். காயம்பட்ட இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது நடந்தது என்ன என்று நெய்ம்காவிடம் இருவரும் கூறியதாக கூறப்படுகிறது. “அவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, திரு பாலத்தை தாண்டியவுடன் ட்ரெயனை நோக்கி வண்டி திரும்பியது. அங்கே தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு முன்னால் இருந்தும் பின்னால் இருந்தும் தாக்குதல் 2 முதல் 3 நிமிடங்களுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது நெய்ம்கா கூறீனார்.
மேலும் பிக்-அப் ட்ரெக்கில் இருந்து இறந்தவர்களின் உடலை இழுத்து சாலையோரம் போட்டதாக ஷெய்வாங் தன்னுடைய உறவினரிடம் கூறியுள்ளார். செய்வாங்கின் சகோதரர் தக்வாங்கும் இந்த ட்ரெக்கில் இருந்து இழுத்தப்பட்டது நியாபகம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் பணியாற்றும் பெயர் கூற விரும்பாத மருத்துவர் ஒருவர், அவர்கள் இருவரும் ஞாயிறு அன்று காலை இங்கே கொண்டு வந்து விடப்பட்டனர். அவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தார்கள் என்றும் தெரியாது என்று கூறினார். மற்றோரு மருத்துவர் அவர்கள் இருவரும் போராட்டக்காரர்கள் என்ற சந்தேகம் நிலவியதாகவும் கூறினார்.
ஆனால், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து செய்திகள் வெளியானதும், மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைப் பெற்று வரும் இருவரின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இதன் மூலம் தான் நாங்கள் அவர்கள் எங்கே என்று அறிந்து கொண்டோம். இல்லை என்றால் அவர்கள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்பது எங்கள் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நெய்ம்கா கூறினார்.

 

 

இந்தியன் எக்ஸ்பிரஸ்